திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

மனோபாலா இயக்கி நடிக்கும் வெப் சீரிஸ்.. முக்கிய ரோலில் நயன்தாராவின் தம்பி

தற்போது மிகவும் பிரபலமாக வெப்சீரிஸ் தொடர்கள் பரபரப்பாக வந்து கொண்டிருக்கின்றன. ராஜ் தொடர் தொலைக்காட்சி தொடர்களை போலவே வெப்சீரிஸ் தொடர்களுக்கும் ரசிகர்கள் ஏராளம்.

பல முன்னணி நடிகைகள் வெப் தொடர்களில் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் .இதில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை என்பதால் கவர்ச்சி கொஞ்சம் அதிகமாகவே காட்டப்படுகிறது. இருப்பினும் வெப் தொடர்கள் தொடர்ந்து வந்த வண்ணமே உள்ளன .

தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மனோபாலா அவர்கள் இயக்கத்தில் புதிதாக ஒரு தொடர் வெளியாக உள்ளது. இயக்குனர் ,தயாரிப்பாளர், சிறந்த நகைச்சுவை நடிகராக இருக்கும் மனோபாலாவின் புதிய வெப் தொடருக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மனோபாலா அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஊர்காவலன் விஜயகாந்தின் சிறைப்பறவை மற்றும் என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் உள்ளிட்ட இருபது படங்களுக்கு மேல் அவர் இயக்கியுள்ளார்.

manobala-cinemapettai
manobala-cinemapettai

மேலும் 100 மேற்பட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .தற்போது மிஸ்டர் உத்தமன் என்ற தலைப்பில் வெப்சீரிஸ் இயக்குகிறார். இதில் நெற்றிக்கண் திரைப்படத்தில் நயன்தாராவிற்கு தம்பியாக நடித்த சச்சின் நாச்சியப்பன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இத்தொடர் காமெடி காதல் கலந்த தொடராக உருவாகி இருக்கிறது.

Trending News