வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

சூடு சொரணை இல்லாமல் திரியும் முத்து.. குடும்பத்தை ஏமாற்றும் மனோஜ் ரோகினி, மீனா மீது பழியை போட்ட விஜயா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி சிட்டிக்கு கொடுக்க வேண்டிய பணத்திற்காக விஜயா,பார்வதியிடம் கொடுத்து வைத்திருந்த 2 லட்ச ரூபா பணத்தை ஆட்டையை போட்டு விட்டார். ஆனால் இது எதுவும் தெரியாத விஜயா, பார்வதியிடம் பணத்தை கேட்ட பொழுது அங்கே பணம் இல்லாமல் போய்விட்டது.

உடனே விஜயா, மீனா மீது பழி போடும் விதமாக மீனா இங்கே வரும்பொழுது அவள்தான் இந்த பணத்தை எடுத்திருக்க வேண்டும் என்று மொத்த பழியையும் மீனா மீது போட்டுவிட்டார். ஆனால் இதை எப்படி யாரிடம் சொல்லி கேட்பது என்று தெரியாமல் விஜய தத்தளித்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் மனோஜ்க்கு டீலர்ஷிப் கொடுக்கிறேன் என்று சொன்ன சந்தோஷ் என்பவர் முத்து குடும்பத்தில் இருப்பவர்களை விளம்பரத்தில் நடிக்க வைக்க பிளான் பண்ணுகிறார்.

இதைப் பற்றி மனோஜிடம் கூப்பிட்டு பேசும் பொழுது உங்கள் குடும்பத்தில் நடிக்கும் நான்கு ஜோடிகளுக்கும் சேர்த்து ரெண்டு லட்ச ரூபாய் பணம் தருகிறேன். அதற்கு பதிலாக நீங்கள் அனைவரும் சேர்ந்து எனக்கு விளம்பரத்தில் நடித்து தர வேண்டும் என்று சொல்கிறார். பணம் என்றதும் மனோஜ் வாயே பிளந்துட்டு ஓகே என்ன சொல்லி விடுகிறார்.

ஆனால் குடும்பத்தில் இருப்பவர்களிடம் விளம்பரத்தில் நடித்துக் கொடுத்தால் பணம் தருவாங்க என்று சொல்லாமல் மறைத்து விட்டு மொத்த குடும்பத்திடமும் எனக்காகவும் என்னுடைய கடைக்காகவும் நடித்துக் கொடுங்கள் என்று கேட்டு விட்டார். அதற்கு முத்து எங்க வேலை, வருமானத்தை விட்டுவிட்டு உனக்காக ஏன் நடித்துக் கொடுக்கணும்.

அப்படி என்றால் நாங்கள் நடித்துக் கொடுக்கணும் என்றால் பணம் வேண்டும் என்று கேட்கிறார். அதன்படி சுருதியும் ஆமாம் நடித்துக் கொடுத்தால் பணம் கிடைக்கும் தானே என்று சொல்கிறார். ஆனால் மனோஜ் பணத்துக்காக பண்ணாமல் என்னுடைய கடைக்காக பண்ணுங்க என்று கெஞ்சுகிறார். உடனே அனைவரும் சேர்ந்து மனோஜுக்காக நடித்துக் கொடுப்பதற்கு சம்மதித்து விட்டார்கள்.

அப்படி நடித்துக் கொடுக்கும் பொழுது சின்ன பிரச்சனை வந்ததால் முத்து கோபப்பட்டு உங்களுக்காக நாங்கள் சும்மா தான் நடித்து கொடுக்கும் என்று சொல்லிவிடுகிறார். அதற்கு அங்கே விளம்பரம் எடுத்துக் கொண்டிருப்பவர்கள் சும்மலாம் நீங்க நடித்துக் கொடுக்கல, என்னுடைய பாஸ் உங்க எல்லாத்துக்கும் சேர்த்து ரெண்டு லட்ச ரூபாய் பணம் கொடுத்து இருக்கிறார் என்று சொல்லிவிடுகிறார்.

உடனே வீட்டிற்கு வந்து அனைவரும் சேர்ந்து மனோஜை கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் மனோஜ் என்னமோ இப்பொழுது தான் ஏமாற்றுவது போல் எல்லாரும் பார்ப்பது கொஞ்சம் ஓவராக இருக்கிறது. ஏனென்றால் மனோஜின் வேலையே அனைவரையும் ஏமாற்றி பணத்தை பறிப்பது தான். இவருடன் சேர்ந்து ரோகிணியும் எல்லா தில்லாலங்களையும் பார்த்துக் கொண்டு வருகிறார்.

இன்னும் பழைய விஷயங்கள் எதையும் கண்டுபிடிக்காமல் ரோகிணி மாட்டாமல் தொடர்ந்து இந்த நாடகம் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது கடுப்பாக இருக்கிறது. இதையும் தாண்டி எவ்வளவு அவமானப்பட்டாலும் நான் இங்கிருந்து போகமாட்டேன் என்று சூடு சொரணை இல்லாமல் முத்துவும் அங்கே குப்பை கொட்டிக்கிட்டு இருக்கிறார்.

போதாதருக்கு தான் அவமானப்பட்டது மட்டுமில்லாமல் தன் குடும்பமும் அவமானப்படுகிறது என்று தெரிந்தும் மீனாவும் அங்கே வேலைக்காரி போல் தான் இருக்கிறார். இவர்கள் இருவரும் திருந்தாதவரை விஜயாவின் ஆட்டமும், ரோகிணியின் பித்தலாட்டமும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும்.

Trending News