Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், விஜயாவுக்கு பேய் கண்டால் பயம் இல்லை என்று சொல்லிய நிலையில் சுருதி இரவு நேரத்தில் விஜயாவை பயமுறுத்தும் விதமாக பல செட்டப்புகளை போட்டு நடுநடுங்க வைத்து விட்டார். இதனால் பயந்து போன விஜயா வெளியே வந்து எட்டிப் பார்க்கிறார். அதே மாதிரி மனோஜும் பயந்து போய் வெளியே வந்த பொழுது சுருதி தான் இந்த வேலையை பார்த்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது.
உடனே விஜயா, இதற்கு எல்லாம் காரணம் மீனாதான். மீனா சொல்லி தான் நீ இந்த மாதிரி பண்ணுகிறாயா என்று மீனாவை தான் திட்டுகிறார். பிறகு இரவு முழுவதும் சவாரிக்கு போயிட்டு வந்த முத்து காலையில் ரொம்பவே சோர்வாக வருகிறார். அதனால் முத்துவுக்கு தேவையான மருந்து ரெடி பண்ணும் விதமாக எண்ணெய் காய்ச்சி மீனா கொண்டு வருகிறார்.
ரோகிணி நம்பி ஓவராக ஆட்டம் போட்ட மனோஜ்க்கு விழும் அடி
இதை தெரியாத்தனமாக சுருதி கொட்டி விடுகிறார். உடனே மீனா அதை துடைப்பதற்காக துணி எடுத்துட்டு வரப் போகிறார். இது தெரியாத விஜயா அதில் வழுகி விழுந்து விடுகிறார். விஜயாவை காப்பாற்ற போன மீனவும் அதில் விழுந்து விடுகிறார். பிறகு மீனா எழுந்திருந்து விஜயாவை காப்பாற்ற போகும் போது விஜயா இதற்கும் சேர்த்து மீனாவை தான் திட்டுகிறார்.
அப்பொழுது நடந்த விஷயத்தை சுருதி மற்றும் ரவி சொல்லிய நிலையில் விஜயா எதையும் காது கொடுத்து கேட்காமல் மீனாவை திட்டுகிறார். அதற்கு முத்து, மீனாவை ஏதாவது சொல்லவில்லை என்றால் உங்களுக்கு தூக்கமே வராது. யார் என்ன பண்ணாலும் அதற்கு மீனா தான் காரணம் என்று அவளை குறை சொல்வது உங்களுக்கு வேலையா போச்சு என்று சொல்கிறார்.
உடனே முத்து, அம்மாவை காப்பாற்ற நினைக்கும் போது மனோஜ் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று விஜயாவை கைப்பிடித்து தூக்க நினைத்தார். ஆனால் மனோஜும் கீழே விழுந்து விடுகிறார். பிறகு ரோகிணி விஜயாவிற்கு மருந்து தேய்த்து விடுகிறார். அந்த நேரத்தில் மீனாவிற்கு சுருதி சப்போட்டாக பேசிய நிலையில் இவர்களுடைய கூட்டணி ரொம்பவே வலுவாய் கொண்டு போகிறது என்று ரோகினி நினைத்து இதற்கு ஆப்பு வைக்கணும் என்று முடிவு பண்ணி விட்டார்.
அதற்காக விஜயாவிடம் இரண்டு பேரையும் பிரிக்க வேண்டும். இல்லை என்றால் நம்ம கதை அவ்வளவுதான் என்று சொல்லி போட்டு கொடுக்கிறார். உடனே விஜயாவும் அந்த சுருதி என் பேச்சை எதையும் கேட்காமல் மதிக்காமல் இஷ்டத்துக்கு ஆடுகிறார். அதுவும் மீனாவை நான் எதுவும் சொன்னால் உடனே சப்போர்ட் பண்ணி என்னை எதிர்த்து பேசுகிறாள் என்று புலம்புகிறார்.
அப்பொழுது ரோகினி, ஸ்ருதி அம்மாவை கூப்பிட்டு பக்குவமாக சொன்னால் அவங்க ஸ்ருதியை சமாளித்து விடுவார்கள். ஏனென்றால் சுருதி அம்மாவுக்கும் மீனா என்றால் பிடிக்காது. அதனால் அவர்கள் மூலம் சுருதியை நாம் மடக்கலாம் என்று ஐடியா கொடுக்கிறார். இதன் மூலம் மீனா மற்றும் சுருதி பிரிந்து போய் விடுவார்கள் என்று நினைத்து ஆப்பு வைக்க தயாராகி விட்டார்கள்.
இதனைத் தொடர்ந்து எதற்கெடுத்தாலும் நான் ஒரு பிசினஸ்மேன் லட்ச லட்சமாக சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன் என்று ஓவராக ஆட்டம் போடும் மனோஜ்க்கு அடுத்து மிகப்பெரிய ஆப்பு தயாராகிவிட்டது. அதாவது பேராசையால் கிரெடிட் கார்டு மூலம் கடனுக்கு மேல் கடன் வாங்கியதால் அதுக்கு வட்டி போட்டு வட்டி அதிகமாகி விட்டது. அதனால் இதன் மூலம் மிகப்பெரிய டார்ச்சர் அனுபவிக்கும் விதமாக மனோஜ்க்கு நெருக்கடி வரப்போகிறது.
இதனை தொடர்ந்து மனோஜ் ஒரு ஏமாளி அவரை ஈசியாக ஏமாற்றி விடலாம் என்று கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் நினைத்துக் கொண்டார்கள். அதன் மூலம் அவர்களும் மனோஜ்க்கு மிகப்பெரிய ஆப்பு வைத்து ஒண்ணுமே இல்லாத அளவிற்கு நடுத்தெருவில் மனோஜை கொண்டு போய் நிறுத்தப் போகிறார்கள். இந்த மக்கு மனோஜ்க்கு இதெல்லாம் தேவை என்பதற்கு ஏற்ப நல்ல அனுபவிக்க போகிறார்.
சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்
- சீதா வேலைக்கு ஆப்பு வைத்த ரோகினி, கெஞ்சிய மீனாவின் தங்கை
- 74 சீரியல் மட்டமான கதையை போட்டு உடைக்கும் பரிதாபங்கள்
- நீலி கண்ணீர் வடிக்கும் மீனாவை அசிங்கப்படுத்திய ரோகினி