Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரவி ஹோட்டலில் இருந்து ஏற்பாடு பண்ணும் பொங்கல் நிகழ்ச்சியில் விஜயா குடும்பத்தில் இருக்கும் மகன்களும் மருமகள்களும் கலந்து கொண்டார்கள். இதில் தனியாக போட்டி வைத்த பொழுது ஆண்கள் அணியில் முத்துவும் பெண்கள் அணியில் மீனாவும் வெற்றி பெற்று விட்டார்கள்.
ஆனால் ஜோடிகளாக போட்டி வைத்த பொழுது விஜயாவின் மூன்று மகன்களும் மருமகள்களும் கோபத்தில் இருப்பதால் ஒருவரை ஒருவர் சண்டை போட்டு கொண்டதால் ஜோடி போட்டியில் தோற்றுப் போய் விட்டார்கள். பிறகு கடைசியாக ரொமான்ஸ் பண்ணும் ஒரு போட்டி வைக்கப்பட்டதில் மூன்று ஜோடிகளும் ஜெய்த்து விட்டார்கள்.
இதை பார்த்த பாட்டி, இதுதான் வாழ்க்கை எப்பொழுதுமே கணவன் மனைவி ஒற்றுமையாக இருந்தால் அவர்களுக்கு மட்டும் வெற்றி கிடையாது குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் வெற்றி கிடைத்துவிடும். சந்தோசம் தானாக வந்து விடும் என்ற விஷயத்தை சொல்லி மூன்று ஜோடிகளுக்கு புரியும்படி அட்வைஸ் பண்ணி விட்டார்.
இதனை அடுத்து குழந்தை பற்றி பாட்டி பேசிய பொழுது சுருதி என்னால் அவ்வளவு வலியெல்லாம் தாங்க முடியாது. அதனால் நான் ரவியிடம் ஏற்கனவே சொல்லிவிட்டேன். எங்களுக்கு குழந்தை வேண்டுமென்றால் வாடகை தாய் மூலம் ஒரு குழந்தையை பெற்றெடுத்துக் கொள்கிறோம் என்று ஸ்ருதி அனைவரும் முன்னாடியும் சொல்கிறார்.
உடனே அண்ணாமலை மற்றும் பாட்டி பொறுமையாக சுருதிக்கு எடுத்துச் சொல்கிறார்கள். ஆனால் விஜயா கொஞ்சம் அடாவடித்தனமாக பேச ஆரம்பித்த பொழுது சுருதி காது கொடுத்து கேட்காமல் எங்களுக்கு வேலைக்கு நேரம் ஆகிவிட்டது நாங்கள் கிளம்புகிறோம் என்று போய்விடுகிறார். அடுத்து பாட்டி கிராமத்தில் வேலை இருக்கிறது என்று சொல்லி ஊருக்கு கிளம்பி விடுகிறார்.
இதனை தொடர்ந்து மனோஜ் ஏற்கனவே போலீஸ் ஸ்டேஷனில் கதிர் முப்பது லட்ச ரூபாய் பணத்தை ஏமாற்றி விட்டு போன விஷயத்தை பற்றி சொல்லி புகார் கொடுத்திருந்தார். அது விஷயமாக கோவிலில் வைத்து பணத்தை கொடுத்த போது சிசிடிவி கேமராவில் அவருடைய முகம் பதிவாகி இருக்கும். அந்த வீடியோவை நீங்கள் வந்து வாங்கினால் ஏமாற்றிய நபரை கண்டுபிடிப்பதற்கு ஈசியாக இருக்கும் என்று மனோஜ் சொல்லியிருந்தார்.
அதன்படி போலீஸ், மனோஜ்க்கு போன் பண்ணி அந்த கோவிலுக்கு வரவழைத்து விட்டார்கள். உடனே மனோஜ் மற்றும் ரோகினி வந்த நிலையில் போலீஸ், கோவில் நிர்வாகிகளிடம் அந்த வீடியோவை வாங்கி விட்டார்கள். அப்பொழுது போலீஸ் இடம் மனோஜ் அந்த வீடியோவை எனக்கு அனுப்பி வையுங்கள் என்று கேட்கிறார்.
அதற்கு அவர்கள் இதை நான் மேல் அதிகாரியிடம் கொடுத்து விடுவேன். நீங்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து உங்களை ஏமாற்றிய நபரை மட்டும் அடையாளம் காட்டிவிட்டு போங்க நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்கிறார். உடனே படிச்ச முட்டாளாக இருக்கும் மனோஜ், அந்த நபரை கண்டுபிடிப்பதற்கு நான் ஒரு ஐடியா கொடுக்கிறேன்.
அதாவது நீங்கள் அந்த வீடியோவை எனக்கு அனுப்பி வைத்து விட்டால் நான் எல்லா சமூக வலைதளங்களிலும் அனுப்பி விடுகிறேன். அப்படி அந்த வீடியோவில் பார்த்த நபரை யாராவது சந்தித்தால் உடனே நம்மளை தொடர்பு கொண்டு சொல்லிவிடுவார்கள். அந்த நபரை பிடிப்பது ஈஸியாகிவிடும் என்று சொல்கிறார்.
அதற்கு அந்த போலீஸ் நீ உண்மையிலே படித்து தான் சர்டிபிகேட் வாங்கினியா? இல்லையென்றால் காசு கொடுத்து ஏதாவது வாங்கினியா என்று அசிங்கப்படுத்தும் அளவிற்கு பேசிவிட்டார். அதாவது சோசியல் மீடியாவில் போட்டு விட்டால் உன்னை ஏமாற்றிய நபர் உஷார் ஆகிவிடுவார் ஏனென்றால் அவரும் தான அந்த வீடியோவை பார்ப்பார்.
பிறகு தலைமறைவாக வேண்டும் என்று ஏதாவது மாறுவேஷம் போட்டு ஊருக்குள் சுற்றினால் நீ எப்படி கண்டுபிடிப்பாய் என்று மனோஜை கழுவி ஊத்தும் அளவிற்கு அசிங்கப்படுத்தி பேசி விட்டார். இதனை பார்த்த சீதா, மனோஜை நக்கலாக பார்த்து சிரிக்க ஆரம்பித்து விட்டார். ஏனென்றால் இந்த பேச்சுக்கள் அனைத்தும் கோவில் வாசலில் வைத்து தான் நடைபெறுவதால் அங்குதான் சீதா மற்றும் மீனாவின் அம்மாவும் நிற்கிறார்கள்.
உடனே சீதா சிரித்ததும் ரோகிணி கோபமாக முறைத்து பார்க்கிறார். இருந்தாலும் சீதா எதற்கு அசராமல் நோஸ்கட் பண்ணி விட்டார். அடுத்ததாக ரோகினியை கையும் களவுமாக பிடிப்பதற்கு முத்து மற்றும் மீனா சேர்ந்து பிளான் போட்டு விட்டார்கள். அந்த வகையில் ரோகிணியின் அப்பாவை சந்தித்து பேச வேண்டும் என்று ஒரு ட்ராமாவை போட்டு மலேசியா போவதாக ஒரு புரளியை கிளப்பி விட்டார்.
இதை தெரிந்து கொண்ட ரோகிணி எப்படி இவர்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மூளை குழம்ப யோசிக்க ஆரம்பித்து விட்டார். ஆனாலும் மலேசியா பொண்ணு ரோகினி இல்லை என்ற விஷயம் இன்னும் கூடிய விரைவில் வெளிவரப் போகிறது. அப்பொழுதுதான் விஜயா மற்றும் மனோஜின் உண்மையான சுயரூபம் ரோகிணிக்கு தெரிய வரும்.