Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ECR-ல் வீடு பார்ப்பதற்காக ரோகினி மற்றும் மனோஜ் வந்து, வீடு முழுவதையும் சுற்றிப் பார்த்து ரொம்பவே அவர்களுக்கு பிடித்து போய்விட்டது. ரோகிணி நம்ம சொர்க்கத்தில் இருக்கும் என்று ஃபீல் பண்ணி இந்த வீட்டை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று மனோஜிடம் சொல்கிறார்.
உடனே மனோஜ் உனக்கு இந்த வீடு பிடிச்சிருந்துச்சுன்னா கண்டிப்பா வாங்கி விடலாம் என்று சொல்லி ஓனரிடம் பேசுகிறார்கள். அந்த வகையில் 5 கோடி மதிப்புள்ள இந்த வீடு உங்களுக்காக 3 கோடியில் தருகிறேன். ஏனென்றால் நாங்கள் இந்த வீட்டை விட்டு எங்களுடைய பிசினஸ் விஷயமாக துபாய்க்கு போகிறோம். அதனால் அங்கே செட்டில் ஆக போகிறோம்.
அத்துடன் எங்களுக்கு கொஞ்சம் அட்வான்ஸ் ஆக 50 லட்ச ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்கிறார்கள். உடனே மனோஜ் 50 லட்ச ரூபாய் பணம் இப்பொழுது இல்லை, ஆனால் அதற்கு பதிலாக 30 லட்சம் ரூபாய் தருகிறோம் என்று சொல்லிவிடுகிறார். உடனே அவர்களும் சரி என்று சொல்லி நிலையில் நீங்கள் 30 லட்சம் ரூபாய் கொடுத்ததும் அதற்கான பேப்பரில் கையெழுத்து போட்டு இந்த வீட்டு சாவியும் கொடுத்து விடுகிறோம் என்று சொன்னதும் ரோகிணி மற்றும் மனோஜ் ரொம்பவே சந்தோஷப்பட்டு விட்டார்கள்.
பணத்தை ஏற்பாடு பண்ணுவதற்கான வேலையை பார்த்து சீக்கிரத்தில் உங்களிடம் பணத்தை தந்து விடுகிறேன் என்று சொல்லி மனோஜ் மற்றும் ரோகினி அந்த வீட்டில் இருந்து கிளம்பி விடுகிறார்கள். இவர்கள் போனதும் அங்கே ஓனராக இருந்தவர்கள் நம் என்ன சொன்னாலும் நம்பி விடுகிறான். சரியான ஏமாந்த பார்ட்டியாக இருக்கிறார், அதனால் 30 லட்சம் பணத்தை வாங்குனதும் ஓனருக்கு கொடுக்க வேண்டிய ஒரு லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு நாம் பெங்களூர் பக்கம் போய்விடலாம் என்று பேசிக் கொள்கிறார்கள்.
அந்த வகையில் இந்த வீட்டுக்கு சொந்தக்காரங்க இவங்க இல்லை, மனோஜிடம் இருந்து 30 லட்சம் பணத்தை ஆட்டையை போட்டுவிட்டு அப்படியே டாடா காமிச்சு எஸ்கேப் ஆகிவிடுவார்கள். இது தெரியாத விஜயா, பார்வதி வீட்டிற்கு வந்து என் பையன் கோடீஸ்வரராக மாறப் போகிறான். அதற்காக முதல் படி தான் 3 கோடி ரூபாயில் பீச் பக்கத்தில் வீடு வாங்க போகிறான் என்று பைத்தியக்காரி மாதிரி புலம்புகிறார்.
அந்த வகையில் மனோஜ் கடன் மற்றும் லோன் வாங்கி அவர்களிடம் கொடுத்து ஏமாறப் போகிறார். கடைசியில் அது சரி கட்டுவதற்கு வேற வழி இல்லாமல் ஷோரூம் கையை விட்டுப் போகப் போகிறது. அடுத்ததாக மீனா கல்யாண மண்டபத்தில் செய்துகொடுத்த ஆர்டருக்கு லாபம் கிடைத்தது என்று 7000 ரூபாய் வாங்கிட்டு முத்துவிடம் கொடுக்கிறார்.
ஆனால் கொடுக்கும்போது உங்களை விட நான் தான் அதிகமாக சம்பாதிக்கிறேன், தினமும் உண்டியலில் நான்தான் பணம் போடுகிறேன் என்று எதார்த்தமாக சொல்லியதால் முத்து முகம் வாடிப்போய் மீனா சொன்னதே நினைத்து பொறாமை பட ஆரம்பித்து விட்டார். இதனால் போகப்போக இவருக்கு இடையே விரிசல் வர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதற்கு இடையில் மீனா எடுத்த ஆர்டருக்கு பதிலாக எப்பொழுதும் சிந்தாமணி என்பவர் தான் டெக்ரேசன் பண்ணிட்டு வந்திருக்கிறார்.
அவருக்கு இந்த பிசினஸ் கிடைக்காமல் போனதால் மீனா மீது கோபப்படும் அளவிற்கு புது ஒரு கேரக்டர் உள்ளே வந்து மீனாவுக்கு எதிரியாக மாறப் போகிறார். ஆக மொத்தத்தில் கடைசிவரை மீனா மற்றும் முத்துவுக்கு இடைஞ்சல் கொடுக்கும் அளவிற்கு பிரச்சனைகள் புதுசு புதுசாக வந்து கொண்டிருக்கிறது தவிர, பொய்யும் பித்தலாட்டமும் பண்ணி ஏமாற்றும் ரோகிணி பற்றிய விஷயங்கள் மட்டும் வெளிவராமல் கமுக்கமாக இருக்கிறது.