ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

மனோஜின் ஷோரூமுக்கு ஆப்பு வைத்த முத்து.. மீனா விட்ட சவால், பைத்தியக்காரி மாதிரி அலைய போகும் ரோகிணி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனா பூ வைத்து கல்யாண மண்டபத்தில் டெக்ரேசன் பண்ணி அதன் மூலம் பிசினஸ் பண்ணலாம் என்று பிளான் போட்டு வருகிறார். ஆனால் மீனா பிசினஸை கெடுக்கும் விதமாக சிந்தாமணி மீனாவின் டெக்கரேஷன் மாடலை குப்பைத் தொட்டில் போட்டு விட்டார்.

இதனால் கோபமான மீனா, இன்னைக்கு என்னுடைய டெக்கரேஷனை நீங்கள் குப்பைத் தொட்டில் போட்டிருக்கலாம், ஆனால் நிச்சயம் ஒருநாள் கோபுரத்தில் கொண்டு போய் வைப்பேன் என்று சவால் விட்டுவிட்டார். அந்த வகையில் இன்னும் கூடிய விரைவில் மீனா அவருடைய பிசினஸை உயர்த்தி காட்டி வெற்றி பெற்று விடுவார்.

ஏனென்றால் ஒரு பிசினஸில் எப்பொழுது போட்டியாளர் வந்து குடைச்சல் கொடுக்கிறாரோ, அப்பொழுது அந்த பிசினஸில் வெறித்தனமாக சம்பாதிக்க ஆரம்பித்து விடுவோம். அதன் வழியில் தற்போது மீனாவின் பிசினஸும் கொடி கட்டி பறக்க போகிறது. அடுத்ததாக பார்வதி வீட்டிற்கு விஜயா வருகிறார்.

விஜயா வந்ததும் பார்வதி,ரோகிணியை பற்றி எடுத்துச் சொல்லி பாவம் தெரியாமல் செய்திருக்கிறார். அதுவும் உன் மகனுக்காக தானே, இனிமேல் இந்த மாதிரி ஒரு தப்ப பண்ணவே மாட்டாள். இந்த ஒரு முறை மன்னித்துவிடு என்று ரோகினி பக்கம் நியாயம் இருப்பது போல் பார்வதி விஜயாவிடம் பேசிவிட்டார்.

அதனால் விஜயா மனசும் மாறிவிட்டது. இதனை தொடர்ந்து விஜயா வீட்டுக்கு போகிறார். அப்படி அங்கு போகும் பொழுது அண்ணாமலையிடம் மீனா, ரோகிணி சாப்பிடவே இல்லை. அத்துடன் மனோஜ் கூட பேசவும் விடாமல் அத்தை காயப்படுத்தி பேசி விட்டார்.

நீங்கள் தான் அத்தையிடம் சொல்ல வேண்டும் என்று ரோகினிக்கு சப்போர்ட்டாக பேசிக் கொண்டிருக்கிறார். இதைக் கேட்டுக் கொண்டு வந்த விஜயா வீட்டிற்கு வந்ததும் மீனாவிடம் சண்டை போட்டு விட்டார். பிறகு அண்ணாமலை, விஜயாவை கூப்பிட்டு ரோகினி என்னதான் தப்பு பண்ணி இருந்தாலும் முழுக்க முழுக்க மனோஜ் மீதும் தப்பு இருக்கிறது.

அதனால் தண்டிக்கணும் என்றால் ரெண்டு பேருக்கும் தான் தண்டனை கொடுக்க வேண்டும். இருந்தாலும் ரோகிணி நம்முடைய மகனுக்காக தான் இந்த மாதிரி ஒரு விஷயத்தை பண்ணியிருக்கிறாள். அதனால் ரோகிணி இடம் கொஞ்சம் கண்டிப்புடன் நடப்பதை தவிர்த்து விடு என்று அட்வைஸ் பண்ணி விடுகிறார். இதனால் விஜயாவின் மனசும் கொஞ்சம் மாறிவிட்டது.

அடுத்ததாக மனோஜ் மற்றும் ரோகினி ஷோரூம் கிளம்பி கொண்டிருக்கும்பொழுது அங்கே மறுபடியும் ஒரு பஞ்சாயத்து ஆரம்பித்துவிட்டது. அதாவது முத்து எல்லோரும் முன்னாடியும் மனோஜிடம் நீ செய்த தவறுக்கு நாட்டாமை சரியான தீர்ப்பை சொல்லவில்லை. அதனால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் தற்போது சோரூமுக்கு சொந்தக்காரர் நீ இல்லை.

இவ்வளவு நாளாக உன் மாமனார் கொடுத்த பணத்தில் தான் ஷோரூம் வைத்திருக்கிறாய் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் இப்பொழுது அது அனைத்தும் அப்பாவுடைய பணம் என்பதால் இனி உன்னுடைய ஷோரூம் கிடையாது. அதனால் ஓனர்ஷிப் பெயர் மாற்றப்பட வேண்டும் என்று சொல்கிறார்.

உடனே மனோஜ் அப்படி என்றால் அந்த ஷோரூம் நீ வச்சுக்கலாம் பாக்குறியா என்று கேட்கிறார். அதற்கு முத்து, எனக்கு அடுத்தவங்க பணத்தின் மீது ஆசை கிடையாது அவசியமும் இல்லை. நான் சொல்ல வருவது அந்த பணம் அப்பாவின் பணம் என்பதால் இனி அந்த சோருக்கு அப்பா தான் ஓனர்.

அதற்குத் தகுந்தபடி எல்லா விஷயத்தையும் மாற்றி விட வேண்டும். நீ அங்கே வேலை பார்த்துக்கொள், அதற்கு ஏற்ற சம்பளம் இனி உனக்கு மாத மாதம் கிடைக்கும் என்று முத்து, மனோஜின் ஷோரூமுக்கு மிகப்பெரிய ஆப்பை வைத்து விட்டார். இதை எதிர்பார்க்காத மனோஜ் அதிர்ச்சியாகி நிலையில் போட்ட மொத்த திட்டமும் பாழாகிவிட்டதே என்று பைத்தியக்காரி மாதிரி ரோகிணி புலம்ப போகிறார்.

ஏனென்றால் பெரிய பிசினஸ் பண்ணி அதன் மூலம் லாபம் கிடைத்துவிட்டால் தனியாக வீடு வாங்கி மனோஜை தனிக்குடித்தனம் கூட்டிட்டு போகலாம் என்று ஒரு கணக்கு போட்டு வைத்திருந்தார். அது எல்லாம் தவிடு பொடியாக்கும் விதமாக முத்து மொத்தமாக ஆப்பு வைத்து விட்டார்.

Trending News