புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மனோரமா போல் எல்லா கேரக்டருக்கும் பொருந்திய ஒரே நடிகை.. கணவரால் கொடுமையான மரணம்

ஐந்து தலை முறைகளான நடிகர் நடிகைகளுடன் 1500 படங்களுக்கு மேல் நடித்து ரசிகர்களால் ‘ஆச்சி’ என அழைக்கப்பட்டவர் நடிகை மனோரமா. இவரை சகலகலாவல்லி என கூறலாம். எந்த கேரக்டராக இருந்தாலும் பின்னி பெடல் எடுத்து விடுவார்.

அம்மா, அக்கா, அண்ணி போன்ற எல்லா கேரக்டரையும் சரிகட்டும் ஆர்டிஸ்ட் இவர் ஒருவரே. ஆனால் இவருக்கு அப்புறம் ஒரு ஹீரோயின் இவரை போல எல்லா கதாபாத்திரத்திற்கும் பொருந்தி மக்கள் ஆதரவையும். அன்பையும் பெற்றார். சிவாஜி, ரஜினி, கமல் என இவர் சேர்ந்து நடிக்காத ஹீரோக்களை கிடையாது.

Also Read: விசுவாசத்தை காட்ட ரஜினியை அவமானப்படுத்திய ஆச்சி.. பெருந்தன்மையை காட்டி கூனி குறுக வைத்த சூப்பர் ஸ்டார்

புன்னகை அரசி என பெயர் எடுத்த கேஆர் விஜயா தான் அந்த ஆர்டிஸ்ட். 1963 ஆம் ஆண்டு வெளியான கற்பகம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர், அதன் பிறகு மிகக் குறுகிய காலத்திலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு தென்னிந்திய மொழிகளில் வெறும் பத்து வருடத்திற்குள் கிட்டத்தட்ட 100 படங்களில் நடித்து அசத்தினார்.

தன்னுடைய வசீகர சிரிப்பால் அனைவரையும் கவரக்கூடிய கேஆர் விஜயா கடந்த 1966 ஆம் ஆண்டு தொழிலதிபர் வேலாயுதம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஹேமலதா என்ற மகள் இருக்கிறார்.

Also Read: கூட்டுக் குடும்பத்தை மையமாக வைத்து வெற்றி பெற்ற 5 படங்கள்.. கண் கலங்க வைத்த சம்சாரம் அது மின்சாரம்

வேலாயுதம் தமிழ் சினிமாவில் ராமன் எத்தனை ராமனடி, தீர்க்க சுமங்கலி உட்பட சுமார் 80க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பல தொழில்களை அவர் மேற்கொண்டார். அதற்காக கேஆர் விஜயா சினிமாவில் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் இவர் கணவர் புடுங்கிக் கொண்டார்.

இதனால் பணம் இல்லாமல் தவித்த கேஆர் விஜயா ஒரு கட்டத்தில் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க துவங்கினார். கடைசியில் நோய் வந்து மரணப்படுக்கையில் இருந்து கஷ்டப்பட்டு இறந்தார். இவருடைய கடைசி காலம் கொடுமையாக அமைந்ததற்கு அவரது கணவர்தான் காரணம் என பலரும் விமர்சித்தனர்.

Also Read: கூட்டுக் குடும்பமாக விசு வெற்றிகண்ட 5 படங்கள்.. கைத்தட்டலை வாங்கிய ‘கம்முனு கிட’ கண்ணம்மாவின் வசனம்

Trending News