திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ராஜுவை அசிங்கப்படுத்திய மன்சூர் அலிகான்.. லோகேஷ் செலக்ஷன்ல இவ்வளவு அர்த்தம் இருக்கா

லோகேஷ் கனகராஜின் படங்களில் நடிகர் மன்சூர் அலிகானின் சாயல் இருக்கும். அதுவும் லோக்கேஷன் கைதி படத்தில் இடம்பெற்ற டில்லி கதாபாத்திரம் மன்சூர் அலிகானை மனதில் வைத்து தான் எடுத்திருப்பார். அதுமட்டுமின்றி பல மேடைகளில் என்னுடைய இன்ஸ்பிரேஷன் மன்சூர் அலிகான் என்று லோகேஷ் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி விஜய்யை வைத்து லோகேஷ் இயக்க உள்ள தளபதி 67 படத்தில் மன்சூர் அலிகான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் லோகேஷின் செலக்ஷன் எப்போதுமே சோடை போகாது என்பதை நிரூபித்து உள்ளார் மன்சூர் அலிகான்.

Also Read : அதை பற்றி பேச கமலுக்கு தகுதியே இல்ல.. பரபரப்பை கிளப்பிய மன்சூர் அலிகான்!

அதாவது விஜய் டிவியில் பிக் பாஸ் வின்னர் ராஜு இதே தொலைக்காட்சியில் ராஜு வீட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் மன்சூர் அலிகான் கலந்து கொண்டுள்ளார். அப்போது ராஜுவை செமையாக வறுத்து எடுத்துள்ளார் மன்சூர் அலிகான்.

அதாவது விஜய் டிவியை பொறுத்தவரை தன் தொலைக்காட்சியில் வேலை பார்க்கும் திறமையான நடிகர்களை தன்வசமே வைத்துக் கொள்வார்கள். அதுவும் அந்த நடிகர், நடிகைகளுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தால் எப்படியும் அடுத்தடுத்த நிகழ்ச்சியில் வாய்ப்பு கொடுத்து விஜய் டிவியிலேயே பயணிக்க வைப்பார்கள்.

Also Read : கிண்டல் செய்ததால் ஏற்பட்ட விபரீதம்.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட பிக்பாஸ் ராஜு

அதேபோல் பிக் பாஸில் வெற்றி பெற்ற ராஜூ அடுத்ததாக வெள்ளித்திரையில் வலம் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் இதே தொலைக்காட்சியில் ராஜு வீட்ல பார்ட்டி என்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதனால் ராஜுவை மன்சூர் அலிகான் விஜய் டிவியில் சுத்திகிட்டு இருக்கியே என கலாய்த்து உள்ளார்.

உட்கார்ந்தா அந்த நாற்காலி மட்டும் தான் சொந்தம், படுத்தா அந்த பாய் மட்டும்தான் சொந்தம், இப்படி சோறு கொண்ட இடமே சொர்க்கம்னு இருக்கியே, போய் படத்துல நடிடா என ராஜுவை வெளுத்து வாங்கினார். மேலும் பிக் பாஸ் வீட்டில் எத்தனை நாள் இருந்த என ராஜுவிடம் கேட்க 106 நாட்கள் என்று கூறினார்.

அதுக்கு பத்து நாள் போராட்டம் செஞ்சுட்டு ஜெயிலுக்கு போய் இருக்கலாம் என ராஜு பாய் மன்சூர் அலிகான் கண்டபடி திட்டினார். மன்சூர் அலிகானை சிறப்பு விருந்தினராக அழைத்ததற்கு விஜய் டிவியையும், பிக் பாஸ் நிகழ்ச்சியையும் வச்சி செய்து விட்டு சென்றுள்ளார்.

Also Read : புதிய அஸ்திரத்தை கையில் எடுக்கும் விஜய் டிவி.. சன் டிவியை ஒழித்து கட்ட பக்கா பிளான்

Trending News