வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மண்டைய போடுறதுக்குள்ள அவர் படத்துல நடிக்கணும்.. வெளிப்படையாக கூறிய மன்சூர் அலிகான்

ஒரு காலத்தில் வில்லன் கதாபாத்திரம் என்றாலே இவரைத்தான் கூப்பிடும் அளவுக்கு ஏராளமான வில்லன் கேரக்டரில் நடித்தவர்தான் நடிகர் மன்சூர் அலிகான். இவருடைய பெருத்த உடலும், முரட்டு பார்வையும் பார்ப்பவர்களை பயம் கொள்ளச் செய்யும்.

இவரை நேரில் பார்த்தாலே மிரண்டு ஓடும் குழந்தைகளும் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு தன்னுடைய வில்லத்தனத்தால் ரசிகர்களை கவர்ந்த மன்சூர் அலிகான் தற்போது மக்கள் நலனுக்காகவும் சில விஷயங்களை செய்து வருகிறார். எந்த விஷயத்தையும் இவர் அலட்டிக் கொள்ளாமல் பேசுவது தான் இவரை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்துள்ளது.

Also read : லோகேஷுடன் கைகோர்க்கும் காவல்துறை.. தளபதி 67ல் இணைய இப்படி ஒரு வாய்ப்பா?

அந்த வகையில் இவருடைய மிகப்பெரிய ரசிகராக இருப்பவர்தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். விக்ரம் திரைப்படத்தின் மூலம் பலரையும் மிரட்டிய இவருக்கு மன்சூர் அலிகானை வைத்து எப்படியாவது ஒரு திரைப்படத்தை எடுத்து விட வேண்டும் என்பதுதான் நெடுநாள் ஆசையாக இருக்கிறது.

சொல்லப்போனால் கார்த்தியின் நடிப்பில் வந்து சக்கை போடு போட்ட கைதி திரைப்படத்தின் கதையையே அவர் மன்சூர் அலிகானை வைத்து தான் எழுதினாராம். அப்போது அவர் நடிக்க முடியாத காரணத்தினால் அந்த வாய்ப்பு கார்த்திக்கு சென்று இருக்கிறது.

இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் விஜய்யின் அடுத்த படத்தில் மன்சூர் அலிகானுக்கு நிச்சயம் ஒரு வாய்ப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் லோகேஷ் குறித்து மன்சூர் அலிகான் தற்போது மனம் திறந்து பேசி இருக்கிறார். கைதி திரைப்படம் வெளிவந்த சமயத்தில் அனைவரும் அதைப் பற்றி என்னிடம் பெருமையாக பேசினார்கள்.

Also read : உலகநாயகனின் அடுத்த டார்கெட் தளபதி.. கூட்டணியில் சேர்ந்த இங்கிலீஷ் பேசும் இயக்குனர்

மேலும் லோகேஷ் பற்றியும் என்னிடம் அனைவரும் கூறினார்கள். ஆனால் இதுவரை நான் அவரை ஒரு முறை கூட நேரில் சந்தித்தது கிடையாது. எனக்கும் நான் மண்டையை போடுவதற்குள் அவர் இயக்கத்தில் நடித்து விட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. கூடிய விரைவில் அதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே லோகேஷ் பலமுறை பேட்டிகளில் மன்சூர் அலிகானை பற்றி கூறியிருக்கிறார். அதாவது கேமராவுக்காக நடிக்கும் மனிதர்கள் மத்தியில் மிகவும் எதார்த்தமாக இருக்கும் அவரை எனக்கு ரொம்பவும் பிடிக்கும் என்று கூறியிருந்தார். அந்த வகையில் இவர்களின் கூட்டணி விரைவில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read : ராஜுவை அசிங்கப்படுத்திய மன்சூர் அலிகான்.. லோகேஷ் செலக்ஷன்ல இவ்வளவு அர்த்தம் இருக்கா

Trending News