ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

கொம்பு சீவி விட்ருக்காங்க, உங்க பருப்பு எண்ட வேகாது.. த்ரிஷா குறித்த சர்ச்சைக்கு மன்சூர் பதில்

Mansoor Alikhan Trisha Issue: தவளை தன் வாயால் கெடும் என்பது போல் மன்சூர் அலிகான் நிலமை தற்போது ஆகிவிட்டது சமீபத்திய பேட்டி ஒன்றில் த்ரிஷாவை பற்றி மன்சூர் அலிகான் பகிர்ந்த கருத்து மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருக்கிறது. மன்சூர் அலிகானை உடனே கைது செய்யுங்கள் என்று பெண்கள் கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு விரும்பத்தகாத விஷயங்களை அவர் பேசியிருக்கிறார்.

லியோ படத்தில் த்ரிஷாவுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு தனக்கு கிடைக்கவில்லை என்பதை முகம் சுளிக்கும் அளவிற்கான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியிருந்தார். இந்த வீடியோவை பார்த்து விட்டு த்ரிஷா தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்து இருந்தார். அவருக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தனக்கு எதிராக பேசப்பட்டு வரும் சர்ச்சைக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார். அவருடைய பதிவில், நடிகை திரிஷாவை நான் தவறாக பேசி விட்டதாக வந்த செய்திகளை என் மகன் மற்றும் மகள் தான் அந்த செய்தியை என்னிடம் காட்டி இருந்தார்கள். என்னோட படம் ரிலீஸ் ஆக இருக்கும் நேரத்தில், பிரபல கட்சியின் சார்பாக நான் போட்டியிட போவதாக அறிவித்திருந்த வேளையில் யாரோ வேணும்னே கொம்பு சீவி விட்ருக்காங்க.

Also Read:த்ரிஷாவை வைத்து கேவலமாக பேசிய மன்சூர் அலிகான்.. லோகேஷ் போட்ட பதிவால் ஆடி போன கோலிவுட்

த்ரிஷாவை நான் பெருமையாக தான் பேசியிருக்கேன். அனுமார் சிரஞ்சீவி மலையை தூக்குனது போல, த்ரிஷாவை காஷ்மீருக்கு தூக்கிட்டு வந்தாங்கனு தான் சொன்னன். முன்னாடி மாதிரி நடிகைகள் கூட நடிக்க முடியலன்ற ஆதங்கத்தை காமெடியாக சொன்னேன். அதுல சின்ன சீனை மட்டும் காமிச்சு கலகம் பண்ணிருக்காங்க. இதுக்கெல்லாம் நா அஞ்சுறவன் இல்லை.

என்னோட நடிச்ச நடிகைகள் எல்லாம் எம்எல்ஏ, எம்பினு இருக்காங்க, பெரிய தொழிலதிபரை கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகிட்டாங்க. என்னோட பொண்ணு தில்ருபா த்ரிஷா ரசிகைனு அவங்கட்டையே சொல்லிருக்கேன். நா இன்னும் 2 பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்ணனும், 360 படங்களில் நடிச்சிருக்கேன், சக பெண் நடிகைகளை மதிக்க கூடியவன்.

சில சொம்பு தூக்குகளின் பருப்பு எல்லாம் என்கிட்ட வேகாது. த்ரிஷாகிட்ட வேணும்னே விடீயோவை கட் பண்ணி காமிச்சு கோபப்படுத்தி காட்டிருக்காங்கனு நல்லா தெரியுது. உலகத்துல எவ்வளவோ பெரிய பிரச்சனைலாம் இருக்கு, போய் பொழப்ப பாருங்க என்று சொல்லியிருக்கிறார்.

Also Read:மன்சூர் அலிகான் செய்த காரியத்தால் லோகேஷ் எடுத்த அதிரடி முடிவு.. லியோவில் நடிக்க வைத்து தான் பெரிய தவறு

Trending News