திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நானும் ரவுடிதான்னு கோர்ட்டுக்கு போன மன்சூர்.. ரெக்கையை புடுங்கி அனுப்பிய நீதிபதி

Mansoor Alikhan: மன்சூர் அலிகான் என்றாலே சர்ச்சை தான். மனதில் பட்டதை பளிச்சென்று பேசக்கூடிய இவர் அதனால் சில சர்ச்சையிலும் மாட்டியிருக்கிறார். அப்படித்தான் ஒரு பிரச்சனையை தீர்க்க கோர்ட்டுக்கு போன அவருக்கு நீதிபதி செமையான ஆப்பு வைத்து அனுப்பி இருக்கிறார்.

சமீபத்தில் திரிஷாவை பற்றி ஏடாகூடமாக பேசி சர்ச்சையை கிளப்பிய மன்சூருக்கு எதிராக ஒட்டுமொத்த திரையுலகமும் திரண்டது. நீ நான் என போட்டி போட்டு அவரை ரோஸ்ட் செய்ததில் மனிதர் பாவம் பொறி கலங்கி தான் போனார்.

அதைத்தொடர்ந்து அந்த விவகாரத்திற்கு மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடித்தார். சரி இதோடு விட்டது என்று பார்த்தால் நானும் ரவுடிதான் என்ற ரேஞ்சுக்கு மான நஷ்ட வழக்கு போடுவேன் என கிளம்பினார். அதன்படி சிரஞ்சீவி, குஷ்பூ, திரிஷா ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தார்.

Also read: இதோட நிறுத்திக்கங்க! இல்லனா பிரளயமே வெடிக்கும் என எச்சரிக்கும் மன்சூர் அலிகான்

அதில் அவர்கள் நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் தர வேண்டும் எனவும் அலப்பறை செய்தார். இது பரபரப்பையும் கிளப்பியது. மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா? நியாயப்படி திரிஷா தான் உங்க மேல கேஸ் போட்டு இருக்கணும்.

நடிகர்களை ரோல் மாடலாக வைத்து கொண்டாடும் ரசிகர்களும் இருக்கிறார்கள். அதனால் உங்களுக்கும் கொஞ்சம் சமூகப் பொறுப்பு வேணும். பார்த்து ஒழுங்கா நடந்து கொள்ளுங்கள் என மன்சூர் அலிகான் ரெக்கையை புடுங்கி துரத்தி விட்டிருக்கிறார்.

இப்படி நீதிபதி லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியதால் மனுஷன் நொந்து போயிருக்கிறார். இனிமேலாவது இவர் வாயை வைத்துக்கொண்டு அமைதியாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் மைக்கை பிடித்தாலே கண்டதையும் உளறும் இவருக்கு அது கொஞ்சம் கஷ்டம் தான்.

Also read: அவர் பாணியில் மன்னிப்பு கேட்ட மன்சூர்.. குதர்க்கமாக குத்தி காமிச்ச திரிஷாவின் சேட்டை

Trending News