திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மீண்டும் திரிஷாவை வம்புக்கு இழுத்த மன்சூர் அலிகான்.. வெடிக்கும் சர்ச்சை

Trisha – Mansoor Ali Khan : கடந்த இரண்டு தினங்களாகவே இணையத்தில் பிரளயத்தையே ஏற்படுத்திய விஷயம் மன்சூர் அலிகான் சர்ச்சையாக பேசியது தான். அதாவது லோகேஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான லியோ படத்தில் மன்சூர் அலிகான் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் மிகவும் கீழ்த்தரமாக மன்சூர் அலிகான் பேசி இருந்தார்.

அதாவது அந்த கால சினிமாவில் வில்லன் என்றாலே சில காட்சிகள் வைக்கப்படும். அதேபோல் லியோ படத்திலும் த்ரிஷாவுடன் தனக்கு நெருக்கமான காட்சிகள் இருக்கும் என்பது போல எதிர்பார்த்தேன். ஆனால் அப்படி எதுவும் நடக்காமல் போய்விட்டது என பேசியிருந்தார். இதற்கு திரிஷாவும் தன்னுடைய கண்டனத்தை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடங்கி பலர் திரிஷாவின் கருத்துக்கு ஆதரவாக கமெண்ட் செய்து வந்தனர். இந்த சூழலில் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் மன்சூர் அலிகான் பேசி உள்ள நிலையில் தவறை உணராமல் மீண்டும் திரிஷாவை வம்பு இழுக்கும் படி பேசியிருக்கிறார்.

Also Read : சம்பந்தமே இல்லாமல் ட்ரெண்டான லெஜன்ட் அண்ணாச்சி.. தப்பித்தோம் பிழைத்தோம் என நடையை கட்டிய மன்சூர்

அதாவது பீச்சில் மது போதையில் திரிஷா இருந்ததாக ஆரம்பத்தில் ஒரு விமர்சனம் செய்தித்தாள்களில் பரவியது. அதை இப்போது மன்சூர் அலிகான் சுட்டிக்காட்டி மோசமான வார்த்தைகளால் பேசி இருக்கிறார். பீச்ல தண்ணி அடிச்சிட்டு நான் ஒன்னும் போலீஸ் கிட்ட மாட்டல, நான் யாரையும் உள்நோக்கத்துடன் இந்த விஷயத்தை சொல்ல, திரிஷா ஒரு நல்ல நடிகை.

அவர் நல்லா வளரட்டும், நான் யாரையும் தப்பா பேசல என்று வஞ்சி புகழ்ச்சி போல் திரிஷாவை வம்பு இழுத்துள்ளார் மன்சூர் அலிகான். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. பட்டும் திருந்தாமல் மன்சூர் அலிகான் மீண்டும் இவ்வாறு சர்ச்சைக்குரிய பேச்சால் பல பிரச்சனைகளை சந்திக்க இருக்கிறார்.

Also Read : இந்த 5 சம்பவம் நடக்கும் போது கோமாவுல இருந்தீங்களா திரிஷா.? மன்சூர் சர்ச்சையின் அதிர வைக்கும் பின்னணி

Trending News