தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி கட்டழகியாக வலம் வந்தவர் நடிகை மந்த்ரா. பார்த்தாலே பற்றிக்கொள்ளும் தோற்றத்தில் இருக்கும் இவரை பார்த்து ஜொள்ளு விடாத ரசிகர்களே கிடையாது.
ரசிகர்கள் மட்டுமா, நடிகர்களும் கூட. மந்த்ரா உடன் ஒரு படத்தில் ஒரு பாடல் காட்சியாவது ஆடி விட வேண்டும் என துடித்த நடிகர்கள் ஏராளம். அப்படி தென்னிந்திய சினிமாவை ஒரு குலுக்கு குலுக்கியவர்தான் நம்ம மந்த்ரா.
முன்னணி நடிகையாக வந்திருக்க வேண்டியவர். பெரும்பாலான படங்களில் இரண்டாம் கட்ட கதாநாயகியாகவே நடித்து தன்னுடைய சினிமா வாழ்க்கையை முடித்துக் கொண்டார். அவரை கவர்ச்சி நடிகையாக பார்த்த நடிகர்கள் ஏனோ முன்னணி நடிகையாக பார்க்க மறுத்து விட்டனர்.
எஸ்எஸ் நிவாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன மந்த்ரா சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வாலு, ஜீவாவின் கவலை வேண்டாம் போன்ற படங்களில் ஆண்ட்டி வேடங்களில் நடித்திருந்தார்.
மந்த்ராவின் சினிமா வாழ்க்கையை பிரபல இயக்குனர் ஒருவர் வேட்டையாடியது பலருக்கும் தெரியாத ஒன்று. 2003 ஆம் ஆண்டு மகேஷ் பாபு நடிப்பில் வெளியான திரைப்படம் நிஜம். இந்த படத்தில் வில்லன் நடிகராக நடித்த கோபிசந்துக்கு மனைவி வேடத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தை இயக்கியவர் தேஜா. இவர்கள் இருவரும் காதலித்து வந்ததும் மந்திராவை முன்னணி நடிகையாக மாற்றுகிறேன் எனக் கூறி அவருடன் பழகி வந்ததும் தெரியவந்தது. அதுமட்டுமில்லாமல் மகேஷ் பாபு படத்தில் மிகப்பெரிய கதாபாத்திரம் கொடுக்கிறேன் என்று சொல்லி வில்லன் நடிகருடன் கவர்ச்சியாக நெருங்கி நடிக்க சொல்லி தன்னுடைய கேரியரை காலி செய்து விட்டார் எனவும் புலம்பியுள்ளார்.
அவர் மீதுள்ள நம்பிக்கையால் இயக்குனர் என்ன சொன்னாரோ அதை அப்படியே செய்து நடித்தேன், ஆனால் படம் வெளியான பிறகு எனக்கு கவர்ச்சி முத்திரை குத்தப்பட்டது தான் மிச்சம் மிகவும் வருத்தப்பட்டு கூறினார் மந்த்ரா.