வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

நிம்மதி பெருமூச்சு விடாமல் நயன்தாராவை துரத்தும் அடுத்த கண்டம்.. 5 கோடிக்கு விக்னேஷ் சிவன் பேசும் பஞ்சாயத்து

நயன்தாரா, தனுஷ் பஞ்சாயத்து போய்க்கொண்டிருக்கிறது. இவர்களுக்குள் உண்டான கதை திருட்டு வழக்கு விசாரணை ஜனவரி 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தனுஷ் தன் பட காட்சிகளை பயன்படுத்தியதற்காக 10 கோடிகள் நஷ்ட ஈடு கேட்டு தொடர்ந்த வழக்கு 15 நாட்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இப்பொழுது தான் நயன்தாரா நிம்மதி பெருமூச்சு விட்டார் ஆனால் அதற்குள் மற்றொரு கண்டம் அவரை நெருக்கி வருகிறது. 2005 ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் சந்திரமுகி. இப்பொழுது இந்த பட பிரச்சனைதான் நயன்தாராவை சுற்றியுள்ளது.

சந்திரமுகி படத்தை தயாரித்தவர்கள் சிவாஜி புரொடக்ஷன்ஸ். netflixக்கு விற்கப்பட்ட நயன்தாராவின் கல்யாண வீடியோவில் சந்திரமுகி பட காட்சிகளையும் வைத்து விட்டதாக புகார் ஒன்று வெளிவந்தது. ஆனால் நயன்தாரா தரப்பில் இருந்து முறையாக சிவாஜி புரொடக்ஷன்ஸ் இடம் அனுமதி வாங்கிய ஆவணத்தை வெளியிட்டார்கள்

சந்திரமுகி படத்தின் உரிமை சிவாஜி புரொடக்ஷன்ஸ் இடமே இல்லையாம், மாறாக சஞ்சய் வாத்வா என்னும் Distributor தான் வைத்திருக்கிறாராம். அதனால் அவரிடம் அனுமதி வாங்கிய பிறகு தான் இந்த படத்தின் காட்சிகளை பயன்படுத்த வேண்டுமாம். நயன்தாரா அப்படி செய்யவில்லை.

இதனால் சஞ்சய் வாத்வா தன் பங்கிற்கு 5 கோடிகள் நஷ்ட ஈடு கேட்டு கழுத்தை நெறித்து வருகிறார். தனுஷ் பஞ்சாயத்துக்கே இன்னும் தீர்ப்பு கிடைக்காததால் நயன்தாராவிற்கு இது மேலும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. 5 கோடிகள் கொடுக்க முடியாது கொஞ்சம் பைசாவை குறைத்துக் கொள்ளுங்கள் என ஒரு பக்கம் விக்னேஷ் சிவன் அவர்களிடம் பஞ்சாயத்து பேசி வருகிறார்.

Trending News