Parthiban Tweet: வணக்கம் இந்தியா, எங்கு தப்பு நடந்தாலும் அங்கே நான் தட்டி கேட்க வருவேன் இந்தியனுக்கு சாவே கிடையாது என்று 106 ஆவது வயதில் இந்தியன் தாத்தாவாக சேனாதிபதி 28 வருடங்களுக்கு பின் களம் இறங்கி இருக்கிறார். பிரம்மாண்ட படைப்புகளை கொடுக்கும் ஷங்கர் இயக்கத்தில் அசால்டாக நடிப்பை வாரி இறைக்கும் கமல் நடிப்பில் இந்தியன் 2 படம் உருவாகி இருக்கிறது.
இப்படம் வருகிற ஜூலை 12ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் வெளிவர இருக்கிறது. 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தின் மீது மொத்த நம்பிக்கையும் வைத்து வசூல் ரீதியாக வேட்டையாட வேண்டும் என்று பல போராட்டங்களை தாண்டி தற்போது வெற்றிக்காக காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் தற்போது இந்தியன் 2 படத்தின் வசூலை முறியடிக்க வேண்டும் என்று பார்த்திபன் சில திட்டங்களை போட்டிருக்கிறார்.
பார்த்திபன் போட்ட ட்விட்
பார்த்திபன் போட்ட இந்த திட்டத்தினால் இந்தியன் 2 பட குழுவினர் ஒட்டுமொத்தமாக பதறிப் போய் இருக்கிறார்கள். அதிலும் இப்படத்தின் தயாரிப்பாளராக இருக்கும் லைக்காவிற்கு மிகப்பெரிய தலைவலியாக மாறிவிட்டது. அப்படி என்ன பார்த்திபன் செய்தார் என்றால் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் டீன்ஸ் படமும் வருகிற ஜூலை 12ஆம் தேதி ரிலீஸ் ஆகப்போகிறது.
இப்படத்தின் கதை ஆனது சிறுவர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் பார்த்திபன் இயக்கிய காக்கைச் சிறக்கினில் படத்தில் எப்படி வனிதா விஜயகுமார் உதவி இயக்குனராக இருந்தாரோ, அதே மாதிரி டீன்ஸ் படத்தில் பார்த்திபனின் உதவி இயக்குனராக ஜோவிகா விஜயகுமார் பணிபுரிந்து இருக்கிறார்.
இந்த சூழலில் இப்படம் வெளிவருவதை ஒட்டி பார்த்திபன் போட்ட பதிவு என்னவென்றால், எதற்காகவும் என்னை நான் குறைத்துக் கொண்டதே இல்லை. ஆனால் டீன்ஸ் படத்தின் டிக்கெட் விலை முதல் சில நாட்களுக்கு 100 ரூபாய் மட்டுமே. இதில் எனக்கு நட்டம் இல்லை. வசதி குறைவானவர்களும் காண வசதியாக இருப்பதன் நாட்டமாகவே நான் இப்படத்தின் டிக்கெட் விலையை குறைத்து இருக்கிறேன் என்று இயக்குனர் மற்றும் நடிகருமான பார்த்திபன் அவருடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
இப்படி இருக்கும் பொழுது இந்தியன் 2 படத்தின் கதை சற்று துவண்டு போயிருந்தாலும் மக்கள் மனதுக்குள் டிக்கெட் ரேட் கம்மிதான அந்த படத்தை போய் பார்க்க தான் செய்யலாமே எப்படி இருக்கு என்று அனைவரும் குடும்பத்துடன் டீன்ஸ் படத்தை போய் பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஒரு வேலை பார்க்கும் பொழுது கதை நன்றாக இருந்து விட்டால் மக்கள் தொடர்ந்து டீன்ஸ் படத்திற்கு மட்டும்தான் வரவேற்பு கொடுப்பார்கள்.
இதனால் இந்தியன் 2 படம் அடி வாங்கவும் வாய்ப்பு இருக்கிறது. எவ்வளவு பெரிய படங்கள் எந்த அளவிற்கு பட்ஜெட்டை போட்டு பிரம்மாண்டமாக எடுத்து இருக்கிறார்களோ, அதைவிட சிம்பிளாக ஒரு புள்ளி வைத்து பார்த்திபன் டிக்கெட் விலையை குறைத்து அனைவரும் கவனத்தையும் திசை திருப்பி விட்டார். இதனால் இந்தியன் 2 படம் சரிவை பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் ஏன் பார்த்திபன் கமலுடன் மோத வேண்டும், இதற்கு பின்னணியில் வனிதாவின் சூழ்ச்சி ஏதாவது இருக்குமோ என்ற கேள்விகளும் இணையத்தில் எழுந்து வருகிறது.
இந்தியன் 2 படத்தின் அப்டேட்
- Indian 2: லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரும் சேனாபதி
- Indian 2: கமலையே பயமுறுத்தும் அக்கடதேச ஹீரோ
- அப்ப விடாமுயற்சி அவ்வளவு தானா