தமிழ் சினிமாவை பொருத்தவரை பல படங்கள் பல்வேறு விதமான பிரச்சனைகளை சந்தித்துள்ளனர். அப்படி அரவிந்த் சாமி நடிப்பில் வெளியாகி பிரச்சனையை சந்தித்த படத்தை பற்றி பார்ப்போம்.
சமீபகாலமாக படங்கள் மீது எதிர்ப்பு வந்தால் அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி என்ன செய்வதென்று தெரியாமல் கண்ணீர் விட்டு விடுவார்கள்.
ஆனால் 1995ஆம் ஆண்டு அரவிந்த் சாமி நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பம்பாய் திரைப்படம் பல்வேறு விதமான பிரச்சனைகளை சந்தித்தது. பெல்ஜியம், போபால், தானே மற்றும் பம்பாய் போன்ற பல மாநிலங்களில் இப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது.
தமிழ் மற்றும் இந்தியில் வெளியான இப்படம் ஹிந்து பையன் ஒரு முஸ்லிம் பெண்ணை காதலிப்பது போல் படத்தின் கதையை அமைத்து இருந்தனர்.
இதற்கு முஸ்லிம் அமைப்பினர் எப்படி எங்களுடைய பொண்ணை ஒரு இந்து பையன் திருமணம் செய்துகொள்ள முடியும் என போராட்டம் நடத்தினர்.
அதுமட்டுமில்லாமல் ஹிந்துக்கு எதிரான காட்சிகளும் படத்தில் இருப்பதால் இந்து அமைப்பினரும் சேர்ந்து போராட்டம் செய்தனர். பல காட்சிகள் நீக்கப்பட்டு இரு தரப்பினரையும் காம்ப்ரமைஸ் பண்ணி படத்தை வெளியிட்டனர்.
இப்படம் வெளியிடுவதற்கு பாம்பே போலீஸ் ஒரு வாரம் தடை செய்தது. பின்பு ஒரு சில நாட்கள் கழித்து படம் வெளியாகி வெற்றி பெற்றது.