இயக்குனர் சரவணன் டைரக்ஷனில் ஆதி, நிக்கி கல்ராணி போன்றவர்கள் நடித்த மரகத நாணயம் படம் ஓரளவுக்கு ஓடியது. அந்தப் படம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ ஆனால் அந்த படத்தின் போஸ்டர் மற்றும் படத்தின் பெயர் இரண்டும் பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கி வெளிவந்தது.
தற்பொழுது மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க சரவணன் முயற்சி செய்துள்ளார். மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை தயாரிப்பாளர் சத்யஜோதி அவர்களிடம் கூறி ஒப்புதல் வாங்கி விட்டார்.
ஆக கண்டிப்பாக மரகதநாணயம் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்படும். இந்தப்படத்தின் கதை முதல் பாகத்தில் இருந்து தொடரும் எனவும், சில காட்சிகளையும் நடிகர்களையும் புதிதாக இறக்குவார்கள் என்று கூறுகிறார்கள். இரண்டாம் பாகத்தில் மரகத நாணயத்தை காட்டிலும் மலையிலும் எடுப்பர்கலாம். கௌ பாய் படத்தின் ஸ்டைலில் இருக்குமாம்.
கண்டிப்பாக இந்த படம் வெளிவந்தால் அது OTTக்கு மட்டும்தான் வரும். ஏனென்றால் மரகதநாணயம் படத்தை பார்த்து வரவேற்ற 90% பேர் OTTயில் பார்த்தவர்கள் மட்டுமே.
எனவே மரகதநாணயம் இரண்டாம் பாகம் படமும் OTTயில் வெளிவரும். அதே போல் இந்த படத்தில் வேலை செய்த அனைத்து டெக்னீஷியன்கள் இரண்டாம் பாகத்தில் வேலை செய்வார்கள் எனவும் தெரிகிறது.