வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

1000 கோடி வசூலை தொடாம விட மாட்டேன் என கங்கணம் கட்டும் மாறன்.. மீண்டும் உருவாகும் நெல்சன் கூட்டணி

Sun pictures joins Nelson: ருசி கண்ட பூனை மறுபடியும் ருசிக்காமல் விடாது என்ற பழமொழிக்கு ஏற்ப, தற்போது கலாநிதி மாறன் ஜெயிலர் படத்தின் வெற்றியால் 600 கோடிக்கும் மேல் லாபத்தை பார்த்தார். இதனால் அடுத்து எப்படியாவது 1000 கோடி வசூலை அடைய வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார். அதற்காக இவருடைய துருப்புச் சீட்டான நெல்சனை பயன்படுத்த நினைக்கிறார்.

அதாவது கலாநிதி மாறன், நெல்சன் மற்றும் ரஜினி இவர்கள் கூட்டணி தற்போது வெற்றி கூட்டணியாக மாறிவிட்டது. அந்த வகையில் மறுபடியும் இதே கூட்டணியை வைத்து லாபத்தை பார்க்க வேண்டும் என்று நெல்சனுக்கு கலாநிதி மாறன் ஒரு ஐடியா கொடுத்திருக்கிறார். அது என்னவென்றால் ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதனுடைய இரண்டாம் பாகத்தை எடுக்க சொல்லி இருக்கிறார்.

Also read: ஒரு மனுசன மட்டம் தட்டி இன்னொருத்தரை புகழ்றது சரியா தலைவரே!. வெற்றி விழாவில் வேதனையில் நெல்சன்

ஆனால் இதற்கு இடையில் ரஜினி அவருடைய அடுத்த படமான 170 ஆவது படத்தை டிஜே ஞானவேல் அவருடன் கமிட்டாகி இருக்கிறார். இதற்கடுத்து 171 வது படத்தை லோகேஷ் உடன் இணைந்து ரஜினியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற இருக்கிறார். ஆசை என்று சொல்வதை விட லோகேஷ் உடன் படம் பண்ண வேண்டும் என்று கனவு கோட்டையை கட்டி வந்திருக்கிறார்.

அந்த வகையில் இந்த இரண்டு படங்களிலும் தற்போது ரஜினி பிசியாக இருப்பதால், எப்படியும் இது முடிவதற்கு கிட்டத்தட்ட ஒரு வருடங்கள் ஆவது ஆகும். அதனால் ஒரு வருடம் கழித்து தான் நெல்சன் உடன் படம் பண்ண முடியும். அதுவரை அவர் காத்திருக்க வேண்டும் இதுதான் நெல்சனின் நிலைமை.

Also read: அதிக பிரசங்கி தனத்தை ஓரம் கட்டிய நெல்சன்.. மிஸ் ஃபயர் ஆன விஷயங்களுக்கு வைத்த முற்றுப்புள்ளி

ஆனால் அதற்குள் சன் பிக்சர்ஸ், நெல்சன் இடம் 55 கோடி சம்பளத்தை கொடுக்க தயார் என்று அவருக்கு கடிவாளம் போட்டு வருகிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது நெல்சன் முழித்துக் கொண்டு வருகிறார். கண்டிப்பாக ரஜினி தற்போது ஜெயிலர் 2வில் நடிக்க முடியாத அளவிற்கு பிஸியாக இருக்கிறார்.

இது தான் சான்ஸ் என்று நெல்சன் அவருடைய அடுத்த படத்திற்கு 60 கோடி சம்பளத்தை தீர்மானித்து தயாரிப்பாளர்களுக்கு ஓகே சொல்லும் ஐடியாவில் இருக்கிறார். ஒருவேளை நெல்சன் கேட்ட சம்பளத்திற்கும் மேலாக கொடுத்து கலாநிதி மாறன் நினைத்தபடி ஒரு படத்தை பண்ணாமல் விட மாட்டார் போல தெரிகிறது.

Also read: விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவில் சாதனை படைத்த நெல்சன்.. பிக் பாஸால் கூட உடைக்க முடியாத டிஆர்பி தெரியுமா?

Trending News