திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் 4 படங்கள்.. ரணகளமாக வரும் ஆர்கே சுரேஷின் காடுவெட்டி

RK Suresh : ஒவ்வொரு வாரமும் தியேட்டர் மற்றும் ஓடிடியில் எக்கச்சக்க படங்கள் வெளியாகிறது. கடந்த வாரம் பெரிய அளவில் தமிழ் சினிமாவில் எந்த படமும் வெளியாகாத நிலையில் பாலிவுட்டில் வெளியான சைத்தான் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழில் இந்த வாரம் வெளியாகும் நான்கு படங்களின் விபரங்களை தற்போது பார்க்கலாம். பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் நடித்துள்ள படம் தான் அமீகோ கேரேஜ். இந்த படத்தை மகேந்திரன் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் மார்ச் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

அடுத்ததாக ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கத்தில் சமுத்திரக்கனி, யோகி பாபு, போஸ் வெங்கட் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள யாவரும் வல்லவரே படமும் இந்த வாரம் வெளியாகிறது. மேலும் இந்த படத்தில் மிகப்பெரிய நடிகர் ஒருவரின் புகைப்படம் படம் முழுக்க இருக்கும் என படக்குழு சஸ்பென்ஸ் வைத்துள்ளது.

Also Read : 3 நாட்களில் சைத்தான் மொத்த வசூல்.. தியேட்டரையே அலறவிடம் மாதவன்

அனீஸ், பிரியன், மனிஷா ஜீத் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஆராய்ச்சி படமும் இந்த வாரம் வெளியாகிறது. அடுத்ததாக தயாரிப்பாளராக கொடிக்கட்டி பறந்த ஆர்கே சுரேஷின் காடுவெட்டி திரைப்படம் வெளியாகிறது. சோலை ஆறுமுகம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சென்சார் போர்டு நிறைய கட்டுப்பாட்டுகள் விதித்திருந்தது.

காடுவெட்டி என்ற டைட்டிலேயே பயன்படுத்தக் கூடாது என சென்சார் போர்டு தடை விதித்த நிலையில் அதன் பிறகு விளக்கம் கொடுத்து டைட்டில் வாங்கி இருந்தனர். ஜாதி ரீதியான படம் இல்லை என்பதை முன்பே ஆர்கே சுரேஷ் கூறியிருந்தார். ஆகையால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

Also Read : குட்டி பவானி எல்லாம் சும்மாதான்.. அதைவிட 10 மடங்கு பவர்ஃபுல்லான கேரக்டரை கையில் எடுத்த மகேந்திரன்

Trending News