Maamannan: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் ஜூன் மாத இறுதியில் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. உதயநிதி, பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த அப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் நல்ல லாபம் பார்த்தது.
அதைத்தொடர்ந்து இப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் தியேட்டரில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை விட இப்போதுதான் அதிகமாக கிடைத்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் வில்லனாக நடித்திருந்த பகத் பாசில் இப்போது ட்விட்டரை ஆதிக்கம் செய்து வருகிறார்.
Also read: சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த மாரி செல்வராஜ்.. பகத் பாசிலால் வெடித்த பிரச்சனை
அதிலும் மாமன்னன் படத்தின் ஹீரோ உதயநிதியா, பகத் பாசிலா என்று இயக்குனரே குழம்பி போகும் அளவுக்கு நெட்டிசன்கள் பயங்கர அட்ராசிட்டி செய்து வருகின்றனர். அந்த வகையில் பகத் பாசில் மாமன்னனில் வரும் காட்சிகளை வீடியோவாக எடிட் செய்து தங்களுக்கு ஏற்றவாறு பாடல்களை அமைத்து அவர்கள் ட்ரெட்ண்ட் செய்து வருகின்றனர்.
அதிலும் ஒவ்வொரு சமூகத்தைச் சார்ந்த மக்களும் ரத்னவேலு கேரக்டரை தங்கள் இனத்தை சேர்ந்தவர் என்று சொல்லும் வகையில் பாடல்களை தேடி பிடித்து எடிட் செய்து வைரலாக்கி வருகின்றனர். அப்படி நெட்டிசன்கள் வெளியிடும் வீடியோக்களை பார்த்து பிரபலங்களே போதும்டா சாமி என்று கதறும் அளவுக்கு இருக்கிறது.
அது மட்டுமல்லாமல் மாமன்னன் படத்தை பார்க்காதவர் யாராவது இந்த வீடியோக்களை பார்த்தால் உண்மையிலேயே பகத் பாசில் தான் ஹீரோ என்றும் வடிவேலு, உதயநிதி எல்லாம் வில்லன்கள் எனவும் நினைத்துக் கொள்வார்கள். அந்த அளவுக்கு ரசிகர்கள் அலப்பறையை கூட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இதனால் பாவம் மாரி செல்வராஜ் தான் நொந்து நூடுல்ஸ் ஆகி போயிருக்கிறார். ஏனென்றால் எந்த ஆதிக்க அரசியலுக்கு எதிராக இந்த கேரக்டரை வடிவமைத்தாரோ அது இப்போது கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பகத் பாசில் என்னும் நடிப்பு அரக்கன் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.