ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

மாமன்னன் படத்தில் வடிவேலு கேரக்டரில் நடிக்க இருந்த பிரபலம்.. மொத்த பிளானையும் மாற்றிய உதயநிதி

Maamannan- Vadivelu: இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் ரிலீஸ் ஆன மாமன்னன் திரைப்படம் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. படத்தின் கதை அமைப்பு, ஒவ்வொரு கேரக்டரிலும் நடித்த நடிகர்கள் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இதுதான் தன்னுடைய கடைசி படம் என அறிவித்தது எல்லாமே இந்த படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்திருந்தது.

இயக்குனர் மாரி செல்வராஜை பொறுத்த வரைக்கும் அவருடைய முதல் படமான பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் முன்னணி நடிகர்கள் என்று யாருமே கிடையாது. அதேபோன்று கர்ணன் திரைப்படத்தில் நடிகர் தனுஷை தவிர மற்ற கேரக்டர்களில் முன்னணி நடிகர்களை அவர் நடிக்க வைக்கவில்லை. அப்படித்தான் மாமன்னன் திரைப்படத்தையும் அவர் பிளான் போட்டு வைத்திருந்திருக்கிறார்.

Also Read:2 வாரத்தைக் கடந்தும் மவுசு குறையாத மாமன்னன்.. ஒட்டுமொத்தமாக இத்தனை கோடியா.!

இந்த படத்தின் கதையை உதயநிதியிடம் சொன்னதும், இப்படி ஒரு கதை தான் தன்னுடைய கடைசி படமாக இருக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்துவிட்டார். அதன் பின்னர் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்தது. படம் உறுதியானதும் முழுக்க முழுக்க முன்னணி நடிகர்கள் மட்டுமே இந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.

நடிகை கீர்த்தி சுரேஷ், வைகைப்புயல் வடிவேலு, நடிகர் பகத் பாசில் மற்றும் படத்தின் இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் என படம் ஒரு பிரம்மாண்ட பாதையை நோக்கி சென்றது. ஆனால் மாரி செல்வராஜ் முதன் முதலில் வடிவேலு நடித்த இந்த கேரக்டரில் நடிப்பதற்கு வேறு ஒரு நடிகரை தான் தேர்வு செய்து வைத்திருந்திருக்கிறார். அந்த பிளானை மாற்றியது உதயநிதி தானாம்.

Also Read:படத்தைப் பார்த்துவிட்டு காரி துப்பினால் அந்தப் படம் தான் ஹிட்.. கீழ், மேல் என உதயநிதியை சீண்டிய அண்ணாச்சி

90களின் காலகட்டத்தில் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித்திற்கு நண்பராக நடித்தவர் தான் சார்லி. அதன் பின்னர் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இவர் குணச்சித்திர கதாபாத்திரத்திலும், நகைச்சுவை கதாபாத்திரத்திலும் சிறந்த நடிப்பில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். வடிவேலு நடித்த கேரக்டரில் சார்லியை நடிக்க வைக்க வேண்டும் என்பதுதான் மாரி செல்வராஜின் திட்டமாக இருந்திருக்கிறது.

இதைப் பற்றி உதயநிதி ஸ்டாலினிடம் சொன்னபோது, அவர் இந்த கேரக்டரில் வடிவேலுவை நடிக்க வைக்கலாம். முதலில் நீங்கள் வடிவேலுவிடம் போய் கதை சொல்லுங்கள், அவர் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டால் நாம் சார்லியை நடிக்க வைப்போம் என்று பிளானை மாற்றி இருக்கிறார். தற்போது இந்த மாமன்னன் திரைப்படம் வடிவேலுவின் சினிமா வாழ்க்கைக்கு மறுபிரவேசமாக அமைந்துவிட்டது.

Also Read:மாமன்னனுக்கு பிறகு மாறிய வடிவேலுவின் இமேஜ்.. யார் சொல்றத நம்புறதுன்னு தெரியலையே!

Trending News