சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

நானும் சாதி படம் எடுத்துக்காட்டவா? வெற்றிமாறன், முத்தையா போன்றோரை குத்திக் காட்டிய மாரி செல்வராஜ்

தமிழ் சினிமாவில் மாஸ் கமர்ஷியல் திரைப்படங்கள், காதல் திரைப்படங்கள் என தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தாலும் அவ்வப்போது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை பற்றி படம் எடுக்கும் வழக்கமும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

அதில் பெரும் பங்கு இயக்குனர் பா ரஞ்சித் பட்டறையில் இருந்து வரும் இயக்குனர்களுக்கு கோலிவுட்டில் அந்த முத்திரையை குத்திவிட்டனர். அதுமட்டுமில்லாமல் முன்னணி இயக்குனராக இருக்கும் வெற்றிமாறனுக்கும் அந்த பெயர் இருந்து வருகிறது.

இந்நிலையில் பரியேறும் பெருமாள் என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட ஜாதியினரை மையப்படுத்தி படம் எடுக்கும் முன்னணி இயக்குனர்களை பொதுமேடையில் தாக்கிப் பேசியுள்ளார்.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தூக்கி வைத்துப் பேசுவது, அதே போல் ஒரு சிலர் சமூகத்தினரை மிகவும் தரை மட்டத்தில் வைத்து அமுக்குவதும் சமீப காலமாக சினிமாவில் அதிகரித்து வருகிறது என குற்றம்சாட்டி உள்ளார் மாரி செல்வராஜ்.

நானும் அவர்களைப் போல் படம் எடுக்கவா, அப்படி படம் எடுத்தால் நீங்கள் எல்லாம் காணாமல் போய் விடுவீர்கள் என்பது போல போட்டு பொலந்து கட்டியுள்ளார். இதனால் கோலிவுட் வட்டாரத்தில் சில சலசலப்புகள் ஏற்பட்டுள்ளதாம்.

maariselvaraj-cinemapettai
maariselvaraj-cinemapettai

ஆனால் பரியேறும் பெருமாள் படமே ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் தான் என்பதை அவரே மறந்துவிட்டார் போல. தற்போது முன்னணி இயக்குனர்களை தாக்கிப் பேசிய மாரி செல்வராஜை பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Trending News