ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2025

எல்லா படங்களிலும் ஒரே சீனை காப்பியடிக்கும் மாரி செல்வராஜ்.. மாமன்னன் ட்ரைலரால் அம்பலமான சீக்ரெட்

Director Mari Selvaraj: சாதி ரீதியான வேறுபாடுகளை தன்னுடைய படங்களில் எந்தவித தயக்கமும் இன்றி காட்டிக் கொண்டிருக்கும் மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் படத்தை எடுத்து முடித்திருக்கிறார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. படம் வரும் ஜூன் 29 ஆம் தேதி ரிலீசுக்காக காத்திருக்கிறது. அந்தப் படத்தின் டிரைலரை பார்த்த பிறகு மாரி செல்வராஜ் ஒரே சீனை அப்படியே காப்பியடித்திருப்பது தெரிய வந்துள்ளது.

அதாவது ஏற்கனவே மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் படங்களின் சாயல் மாமன்னனில் கொஞ்சம் அதிகமாகவே காணப்படுகிறது. மாரி செல்வராஜ் எப்போதுமே தன்னுடைய படத்தில் கண்ணாடிகளை உடைக்கக்கூடிய சீன்களை வைப்பார்.

Also Read: தேவர்மகன் சாயலில் மாமன்னனாக அவதாரம் எடுத்த வடிவேலு.. எதிர்பார்ப்பை மிரள விட்ட ட்ரெய்லர்

முதலில் பரியேறும் பெருமாள் படத்தின் ஹீரோ கோபத்தில் ஒரு கார் கண்ணாடியை அடித்து உடைப்பது போன்ற சீன் இடம் பெற்றிருக்கும். அதேபோன்று கர்ணன் படத்திலும் இடைவெளிக்குப் பிறகு வரும் காட்சியில் பஸ்ஸின் பின்பகுதி கண்ணாடியை, உருட்டு கட்டையால் தனுஷ் அடித்து நொறுக்குவது போன்ற காட்சியை வைத்திருப்பார்.

அதேபோலவே சமீபத்தில் வெளியான மாமன்னன் பட ட்ரைலரிலும் சண்டை பயிற்சியில் ஈடுபடக்கூடிய இடத்தில் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்குவது போன்ற காட்சியும் இடம் பெற்றிருக்கிறது. இந்த ட்ரெய்லரில் இடம்பெறும் காட்சிகளில் பெரும்பாலான சீன்கள் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி செல்வராஜின் கண்ணன் படத்தில் இடம்பெற்று இருப்பது போலவே தோன்றுகிறது.

Also Read: மாமன்னன் வடிவேலுவால் அப்செட் ஆன உதயநிதி.. பிள்ளையார் பிடிக்க குரங்காய் மாறிய கதை

ஏனென்றால் ட்ரெய்லரில் நிறைய நாய்கள் வேகமாக ஓடுவது போன்றும், கடைசியில் ஒரு நாய் உயரமான மலைப் பகுதியின் உச்சியில் நிற்பது போல, ஒரு ஷாட்டை கீழிருந்து எடுத்திருப்பார்கள். இதேக்காட்சி கர்ணன் படத்தில் தனுஷ் ஒரு மலை மீது உச்சியில் தனியாக நிற்பது போன்று இடம்பெற்றிருக்கும். அதேபோல் கர்ணன் படத்தில் மாரி செல்வராஜ் கருப்பு நிற குதிரையை பயன்படுத்தி இருப்பார். கிளைமேக்ஸ் காட்சியில் தனுஷ் அந்த குதிரையின் மீது கம்பீரமாக வந்து இறங்குவார்.

கர்ணன் படத்தை தொடர்ந்து இப்போது மாரி செல்வராஜின் மாமன்னன் படத்திலும் குதிரையை பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் என்ன ஒரு வேறுபாடு என்றால், கர்ணன் படத்தில் ஹீரோ குதிரையை பயன்படுத்தி இருப்பார், ஆனால் மாமன்னன் படத்தில் வில்லன் பகத் பாசில் குதிரையின் மீது கெத்தாக அமர்ந்திருக்கிறார். இப்படி தொடர்ந்து தன்னுடைய படங்களில் ஒரே மாதிரியான காட்சிகளை பயன்படுத்தி இருக்கும் மாரி செல்வராஜின் சீக்ரெட் மாமன்னன் ட்ரெய்லரின் மூலம் அம்பலம் ஆகி இருக்கிறது.

Also Read: ஒரே கல்லில் ரெண்டு மாங்கா லாபத்தை பார்த்த மாரி செல்வராஜ்.. உதயநிதி மனசு வைத்தால் எது வேணாலும் நடக்கும்

Trending News