ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

குரங்கு கையில பூமாலை கிடைச்ச கதைதான்.. எதையும் சரியாகப் பயன்படுத்தாத மாரி செல்வராஜ்

Mari Selvaraj: மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியான படம் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின், வடிவேலு மற்றும் பகத் பாசில் போன்ற முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் போன ரசிகர்களுக்கு சில விஷயத்தில் ஏமாற்றத்தை கொடுத்துள்ளார் மாரி செல்வராஜ்.

அதாவது படத்தின் கதாநாயகன் உதயநிதிக்கு இது கடைசி படம் என்றாலும் படத்தில் அவருக்கு பெரிய அளவில் ஸ்கோப் எதுவும் இல்லை. அதுவும் அவரது முகத்தில் எந்த ரியாக்ஷனும் சரியாக கொடுக்கவில்லை. அடுத்ததாக சொல்ல வேண்டும் என்றால் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

Also Read : மாரி செல்வராஜுக்கு உதயநிதி கொடுத்த பரிசு.. விலை மட்டும் இத்தனை லட்சமா.?

இந்நிலையில் வடிவேலு பாடிய பாடலைத் தவிர படத்தில் ஒரு பாட்டு கூட சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. இவ்வாறு ஏஆர் ரகுமானையும் மாரி செல்வராஜ் இந்த படத்தில் சரியாக பயன்படுத்தாமல் தவற விட்டுவிட்டார். அதுமட்டுமின்றி நடிப்பு அரக்கன் பகத் பாசிலுக்கும் வலிமையான கதாபாத்திரம் கொடுக்கப்படவில்லை.

அதேபோல் நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்புக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. அப்பேர்ப்பட்ட நடிகையை வெறுமனே பயன்படுத்தியிருக்கிறார் மாரி செல்வராஜ். இதையெல்லாம் கூட பொறுத்துக் கொள்ளலாம் டப்பிங் ஆர்டிஸ்ட் ரவீணா ரவி இந்த படத்தில் பகத் பாஸிலின் மனைவியாக நடித்திருந்தார்.

Also Read : குழி தோண்டி புதைக்க நினைத்த கூட்டம்.. மீண்டும் நடிகனாக நிரூபித்த ‘மாமன்னன்’ வடிவேலுவின் வெற்றிக்கு காரணம்

சினிமாவுக்கு பல நடிகைகளுக்கு தனது இனிமையான குரலால் டப்பிங் கொடுத்திருக்கிறார். இந்நிலையில் மாமன்னன் படத்தில் சில காட்சிகளில் இடம் பெற்ற ரவீணா ரவி ஒரு வசனம் கூட பேசாதது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. மேலும் இவர் லவ் டுடே படத்தில் யோகி பாபுவுக்கு மனைவியாக நடித்திருந்தார்.

மாமன்னன் படத்தில் தனக்கு வசனம் எதுவும் இல்லை என்றாலும் படத்தில் நடித்தது மகிழ்ச்சி என்று ரவீணா ரவி கூறி இருக்கிறார். ஆனாலும் குரங்கு கையில் பூமாலை கிடைத்த கணக்காக மாமன்னன் படத்திற்கு ஏகப்பட்ட விஷயங்கள் கிடைத்தாலும் அதை சரியாக பயன்படுத்தாமல் மாரி செல்வராஜ் கோட்டை விட்டுவிட்டார்.

Also Read : மாமன்னனை வைத்து வடிவேலு போட்ட கணக்கு.. அதிரடியாக இறக்கிய நங்கூரம்

Trending News