சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

Most Wanted Director-ஆக மாறிய மாரி செல்வராஜ்.. நடிகர்கள், போட்டி போட்டு வரிசையில் waiting

தன் வாழ்வில் பட்ட துயர்களை தனது ஒவ்வொரு படைப்பின் மூலம் மிகவும் ஆழமாக வெளிப்படுத்தி வருபவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இவரின் முதல் படமான பரியேறும் பெருமாள் தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய தாக்கம் கொஞ்சம் நஞ்சமல்ல.

இந்நிலையில், இவரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட வாழை திரைப்படம் பல இயக்குநர்களையும் கலங்க வைத்தது. நடிகர்கள் பலரும் மாரி செல்வராஜை பாராட்டிய நிலையில் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக கருத்து தெரிவித்து வந்தனர்.

இதற்கிடையில், மாரி செல்வராஜ் வாழை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் கார்த்தியை வைத்து படம் எடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். நடிகர் கார்த்தியின் அடுத்த படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதில், நடிகர் கார்த்தி, இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது, நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து பைசன் திரைப்படத்தை எடுத்து வருகிறார்.

மாரி செல்வராஜ் இந்தப் படத்தை முடித்த பிறகும், கார்த்தி சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகும் இவர்களது படத்தின் பணிகள் தொடங்கும் எனத் தெரிகிறது. இதற்கிடையில், தனுஷ் வேற எப்போது என்னை வைத்து அடுத்த படம் பண்ணுவீர்கள் என்று கேட்க ஆரம்பித்து விட்டார். அவருடனான கூட்டணியை தமிழகமே எதிர்பார்த்து வருகிறது. ஏன் என்றால், கர்ணன் படம் கொடுத்த தாக்கம் அப்படி..

இப்படி பட்ட சூழ்நிலையில், most wanted இயக்குனராக வளம் வருகிறார் மாரி செல்வராஜ். நடிகர்களின் கால் ஷீட்டை விட, இவரின் கால் சீட் எப்போது கிடைக்கும் என்று டாப் நடிகர்களே எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

Trending News