உதயநிதி ஸ்டாலின் ஆரம்பத்திலிருந்தே அரசியலில் இருந்தாலும் சினிமாவுக்கு வந்த பிறகு தான் அவர் மீது ஒரு தனிக் கவனம் ஏற்பட்டது என்பதை மறுத்து விட முடியாது. ஆரம்பத்தில் சுமாரான படங்களில் நடித்துக்கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலின் கடைசியாக சில நல்ல படங்களில் நடித்துள்ளார்.
மனிதன், நிமிர் போன்ற எதார்த்தமான படங்களில் நடித்து ரசிகர்கள் இடையே நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற்றார். அதைத் தொடர்ந்து வெளியான சைக்கோ திரைப்படம் அவருக்கு வசூல் ரீதியாக ஒரு நல்ல படமாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து அடுத்ததாக மகிழ்திருமேனி படம், ஹிந்தி ஆர்டிகல்15 ரீமேக் என கவனமாக படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதேபோல் வெற்றிப்படங்கள் கொடுக்கும் இளம் இயக்குனர்களுக்கும் அட்வான்ஸ் கொடுத்து தன் பக்கம் இழுத்துக் கொள்கிறாராம்.
அப்படித்தான் சமீபத்தில் தனுஷுக்கு கர்ணன் என்ற மிகப்பெரிய வெற்றியை கொடுத்த மாதிரி செல்வராஜுக்கு விரைவில் இணைந்து ஒரு படம் செய்யலாம் என வாக்குறுதி கொடுத்தாராம். அதை நம்பி காத்துக்கொண்டிருந்தார் மாரி செல்வராஜ்.
ஆனால் தற்போது அரசியலிலும் பிஸியான ஆளாக வலம் வரும் உதயநிதி ஸ்டாலின் மாரி செல்வராஜ் படத்திற்கு தேதி கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதே நேரத்தில் மாரி செல்வராஜ் விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து உருவாக்கும் படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் அனைத்துமே எப்போதே முடித்து விட்டார்.
ஆனால் இடையில் உதயநிதி ஸ்டாலின் வந்ததால் அந்தப் படமும் செய்ய முடியாமல் இந்த படமும் செய்ய முடியாமல் தடுமாறி கொண்டிருக்கிறாராம். கொஞ்சம் வெளிச்சம் கொடுங்க சார்!