சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

தியேட்டர்ல மிஸ் பண்ணிட்டீங்களா, ஓடிடிக்கு வரும் வாழை.. எதில், எப்போது தெரியுமா.?

Vazhai Movie: இயக்குனர் மாரி செல்வராஜ் தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து வரும் நிலையில் இந்த வருடம் தனது கனவு படமான வாழை படத்தை இயக்கியிருந்தார். ஏகப்பட்ட குழந்தை நட்சத்திரங்கள், கலையரசு போன்ற பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

ஆகஸ்ட் 23 தியேட்டரில் இந்த படம் வெளியான நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பல பிரபலங்கள் படத்திற்கு வாழ்த்து தெரிவித்து இருந்தனர். அதுவும் வாழை படம் ஓடிக்கொண்டிருந்த தியேட்டர்கள் எல்லாமே ஹவுஸ் ஃபுல்லாக இருந்தது.

அந்த அளவுக்கு எதார்த்தமாக இந்த கதையை மாரி செல்வராஜ் எடுத்திருந்தார். அவரது வாழ்வில் ஏற்பட்ட சம்பவங்களையும் இந்த படத்தில் உள்ளடக்கி பல பிரபலங்களை கண்கலங்க செய்திருந்தார். அப்படிப்பட்ட படத்தை தியேட்டரில் சிலர் பார்க்க தவற விட்டிருக்கலாம்.

ஓடிடியில் வரவுள்ள மாரி செல்வராஜின் வாழை படம்

அவர்கள் இப்போது ஓடிடியில் இந்த படத்தை பார்க்க ஏதுவாக டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வருகின்ற அக்டோபர் 11 ஆம் தேதி வாழை படம் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது. இதனால் படத்தை பார்க்காதவர்கள் மட்டுமல்ல மீண்டும் வாழை படத்தை பார்க்க நினைப்பவர்களும் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் பார்க்கலாம்.

இப்போது பெரும்பாலான படங்கள் தியேட்டரில் வெளியான பிறகும் ஓடிடியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படம் ஓடிடியிலும் 100 நாட்கள் தாண்டி அதிக பார்வையாளர்களைக் கடந்து வெற்றிகரமாக செல்கிறது.

அதேபோல் வாழை படத்திற்கும் ஓடிடியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற சின்ன பட்ஜெட் படங்கள் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. பயங்கரமாக புரமோஷன் செய்து பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் சமீபகாலமாக அதிகம் தோல்வியை தழுவுகிறது.

ஓடிடியில் வரவேற்பு பெரும் படங்கள்

Trending News