புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மாரி செல்வராஜ் கையில் இருக்கும் 4 படங்கள்.. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக உள்ள தனுஷின் படம்

இயக்குனர் மாரி செல்வராஜ் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட வித்தியாசமான கதைகளை படமாக எடுக்க கூடியவர். அவருடைய பரியேறும் பெருமாள் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இதைத்தொடர்ந்து தனுஷ் உடன் இவர் கூட்டணி போட்ட கர்ணன் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்போது அவரது கைவசம் இருக்கும் நான்கு படங்களை பார்க்கலாம்.

மாமன்னன் : மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் மற்றும் பல பிரபலங்கள் நடித்து வரும் படம் மாமன்னன். இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது. மேலும் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். மாமன்னன் படத்தின் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

வாழை : கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் பலர் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கி, தயாரிக்கும் படம் வாழை. இப்படம் மாரி செல்வராஜின் கனவு படமாக உருவாக்கி வருகிறது. மேலும் வாழை படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திற்காக தயாராகி கொண்டிருக்கிறது. இப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

துருவ் விக்ரம் : விக்ரமின் வாரிசான துருவ் விக்ரமுக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எந்த படமும் போகவில்லை. எனவே தனது மகனை மாரி செல்வராஜை நம்பி ஒப்படைத்து உள்ளார் விக்ரம். அதன்படி துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் கூட்டணியில் புதிய படம் உருவாக இருக்கிறது. இதற்கான சூட்டிங் மே மாதம் இறுதியில் தொடங்க இருக்கிறது.

தனுஷ் : மாரி செல்வராஜ் மற்றும் தனுஷ் கூட்டணியில் ஏற்கனவே கர்ணன் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. மீண்டும் இதே கூட்டணியில் ஒரு படம் உருவாக இருக்கிறது. மேலும் இந்த படத்தை தனது வுண்டர் பார் நிறுவனத்தின் மூலம் தனுஷ் தயாரிக்க இருக்கிறார். இப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப் இருக்கிறார்கள்.

உலகில் தலைசிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த படத்தில் பணியாற்ற இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தனுஷின் கேரியரில் மிக முக்கியமான படமாக இப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. துருவ் விக்ரம் படத்தை முடித்த கையோடு தனுஷ் படத்தை மாரி செல்வராஜ் இயக்க இருக்கிறார்.

Trending News