திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

புதுசா கிளம்பியிருக்கும் மாரி செல்வராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்.. மாமன்னன் கதையில், கர்ணன் பட கேரக்டர்!

ஒரு இயக்குனர் இயக்கும் படத்தில் அவருடைய முந்தைய படங்களின் கேரக்டர்கள் வந்து போவது என்பது இதற்கு முன்பாக கூட நடந்து இருக்கிறது. ஆனால் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் இந்த ட்ரெண்டை மீண்டும் கொண்டு வந்த பிறகு இது பயங்கர வைரலாகி கொண்டு இருக்கிறது. கைதி, விக்ரம் போன்ற படங்களை தொடர்ந்து தற்போது அவர் எடுத்துக் கொண்டிருக்கும் லியோ படத்தில் கூட லோகேஷின் சினிமாட்டிக் யுனிவர்ஸ் வர வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் தற்போதைய ட்ரெண்டாக லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் இருக்கும் பொழுது, சத்தமே இல்லாமல் மாரிசெல்வராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் சில தினங்களாக சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது. மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என்னும் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்காக தான் இப்போது சினிமாட்டிக் யுனிவர்ஸ் ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கிறது.

Also Read:தவளை போல் தன் வாயால் கெட்ட வடிவேலு.. கேரியர் தொலைய காரணமான விஷயம்

பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இவர் ஒரு எழுத்தாளரும் கூட. இவரின் எழுத்துக்கள் மற்றும் படங்கள் பெரும்பாலும் தென் மாவட்டங்களின் ஆதிக்க சமூக அநீதியை பிரதிபலிப்பதாகவே இருக்கும். முதல் படத்திலேயே ரசிகர்களை உற்று கவனிக்க வைத்த இவர், இரண்டாவது படமான கர்ணன் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற்றார்.

தற்போது இயக்கிய மாமன்னன் திரைப்படம் ரிலீசுக்கு முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் படத்தின் போஸ்டர் தான். ஒரு பக்கம், உதயநிதிக்கு வெயிட்டான கதாபாத்திரம் என்றாலும், மறுபக்கம் யாரும் எதிர்பார்க்காத ஒரு கெட்டப் மற்றும் முகபாவனைகளோடு வைகைப்புயல் வடிவேலு.

Also Read:முழு அரசியல் படமாக உருவாகியுள்ள மாமன்னன்.. வடிவேலுவை வைத்து காய் நகர்த்தும் உதயநிதி

வடிவேலுவின் 2,3 லுக் வெளியான பிறகு, அந்த கேரக்டரின் கைகளில் குத்தப்பட்டிருக்கும் பச்சை தற்போது அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகிறது. வடிவேலுவின் கையில் கர்ணன் படத்தில் ஏமராஜாவாக நடித்த நடிகர் லால் கேரக்டரின் முகம் பச்சை குத்தப்பட்டிருக்கிறது. கர்ணன் திரைப்படம் 1995 ஆம் ஆண்டு நடந்த கொடியன்குளம் சாதிக் கலவரத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.

                                                  வடிவேலுவின் கைகளில் குத்தப்பட்டிருக்கும் பச்சை

Maamannan movie Vadivelu

ஒரு வேளை இந்த படம் அதன் தொடர்ச்சியாக என்ன நடந்தது என்பதை மைய்யமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும் இது அரசியல் களம் சார்ந்த படம் என்பதை இயக்குனர் மாரிசெல்வராஜ் ஏற்கனவே சொல்லிவிட்டார். இதில் உதயநிதியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில் நடிக்கின்றனர். வடிவேலு இந்த படத்தில் ஒரு பாடலும் பாடியிருக்கிறார்.

Also Read:இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடிக்கும் வடிவேலு.. மாரி செல்வராஜ் செய்யப் போகும் சம்பவம்

Trending News