திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

87 கோடி வசூலுடன் முரட்டு இயக்குனருடன் கைகோர்த்த மார்க் ஆண்டனி.. விக்ரம் இடத்தைப் பிடிக்கும் விஷால்

Actor Vishal: ஒருவருக்கு நல்ல நேரம் வந்துவிட்டால் தொடர்ந்து அவருக்கு நல்லதே நடக்கும் என்பதற்கு உதாரணமாக விஷால் இருக்கிறார். அதாவது பல வருட காலமாக தோல்வியை மட்டும் பார்த்து வந்த இவர் இப்பொழுது மார்க் ஆண்டனி படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை அடைந்து 87 கோடி வசூலை பெற்று விட்டார். மேலும் இப்படத்தின் மூலம் மக்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்து விட்டது.

அதனால் இந்த சூட்டோடையே அடுத்த படத்தையும் கொடுத்த விட வேண்டும் என்று இவருடைய 34 ஆவது படத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டார். அந்த வகையில் இவருடைய அடுத்த படத்தை இயக்குனர் ஹரி இயக்க இருக்கிறார். இவருடைய இயக்கத்தில் விஷால் ஏற்கனவே பூஜை, தாமிரபரணி படங்களில் நடித்திருக்கிறார்.

Also read: 4 கோடி காசு வச்சுட்டு வராதீங்க, தயாரிப்பாளரா கதறிய விஷால்.. சல்லி காசுக்கு பிரயோஜனம் இல்ல

இந்த இரண்டு படங்களுமே விஷாலுக்கு வெற்றியாக தான் அமைந்தது. அந்த வகையில் மறுபடியும் மூன்றாவது முறையாக இவர்கள் சேர்ந்த இந்த கூட்டணி கண்டிப்பாக வெற்றி அடையும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். மேலும் விக்ரமுக்கும் இவர் தான் அதிகப்படியான வெற்றியை கொடுத்து இருக்கிறார். அந்த லிஸ்டில் தற்போது விஷாலும் சேரப் போகிறார்.

அத்துடன் இப்படத்திற்கான படப்பிடிப்பை இன்று துவங்கி விட்டார்கள். மேலும் இதற்கான படப்பிடிப்பு தூத்துக்குடியில் இருக்கும் குமரசகாணபுரம் என்ற இடத்தில் நடைபெறுகிறது. இங்கே கிட்டத்தட்ட 15 நாட்கள் சூட்டிங் வைப்பதற்கு முடிவு எடுத்து இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் எந்தவித பிரேக்கும் இல்லாமல் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்று மும்மரமாக செயல்பட்டு வருகிறார்கள்.

Also read: விஷால் சொந்த செலவில் சூனியம் வைத்த 10 படங்களில் 5 வெற்றி.. மார்க் ஆண்டனி படத்தை தவறவிட்டது தப்பா போச்சு.!

அதனால் இப்படப்பிடிப்பை முடித்த கையோடு காரைக்குடியில் அடுத்த 15 நாட்கள் சூட்டிங் நடத்தப் போகிறார்கள். மேலும் இன்றைக்கான காட்சிகள் ரொமான்ஸ் வைத்து ஆரம்பிக்கப்படுகிறது. அந்த வகையில் இவருக்கு ஜோடியாக ரொமான்ஸ் செய்யப்போவது பிரியா பவானி சங்கர். அதனால் இவர்களுக்கான காட்சிகள் தான் இன்று நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து இவர்கள் அனைவரும் மிக மும்மரமாக செயல்பட்டு வருவதால் கூடிய விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்பை முடித்து விடுவார்கள் என்பது தெரிகிறது. எது எப்படியோ இனியாவது விஷாலுக்கு நல்ல காலம் பிறந்து அவருடைய படம் வெற்றி அடைந்தால் சந்தோஷம்.

Also read: அவ்ளோ நாளெல்லாம் கால் சீட் கொடுக்க முடியாது.. மார்க் ஆண்டனியால் விஷால் மறுத்த வாய்ப்பு

Trending News