Mark Antony: இறந்து 27 வருடங்கள் கழிந்த பிறகும் இன்னும் கிரேஸ் குறையாமல் இருக்கும் ஒரே நடிகை சில்க்காக மட்டும் தான் இருக்க முடியும். இப்போதும் கூட இவரை டிவியில் பார்த்து ரசிக்கும் ரசிகர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
ஆனால் 2k கிட்ஸ்களுக்கு இவரைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சோசியல் மீடியா பெருகி விட்ட இந்த காலகட்டத்தில் இவர் பற்றிய செய்திகளை கேள்வி பட தான் முடியும். ஆனால் அவர் எந்த அளவுக்கு திரையுலகை கட்டி போட்டார் என்பது அந்த கால ரசிகர்கள் மட்டுமே அறிந்த கதை.
Also read: முதலிரவு காட்சியில் விஷாலை கணித்த நடிகை.. இப்ப வர பருப்பு வேகாத கொடுமை
அந்த குறையை போக்கும் வகையில் மார்க் ஆண்டனி படத்தில் சில்க் வரும் அந்த சீன் இப்போது தியேட்டரையே அலற வைத்துள்ளது. இரண்டாம் பாதியில் சில நிமிடங்கள் மட்டுமே இந்த காட்சி வருகிறது. ஆனால் ஒட்டுமொத்த படத்துக்கும் இது முத்தாய்ப்பாக இருக்கிறது.
அந்த அளவுக்கு ஆடியன்ஸ் இந்த காட்சி வரும்போது கைத்தட்டி ஆரவாரம் செய்து ரசிப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இவ்வாறாக ரசிகர்களின் ரசனையை புரிந்து கொண்டு இப்படி ஒரு காட்சியை வைத்த இயக்குனரை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.
அந்த வகையில் டைம் டிராவல் சம்பந்தப்பட்ட இந்த கதையில் சில்க் காட்சியை கிராபிக்ஸ் செய்யாமல் அவரைப் போன்ற உருவ ஒற்றுமை கொண்ட ஒரு பெண்ணை நடிக்க வைத்ததும் புத்திசாலித்தனமான விஷயமாகும். அதுதான் இப்போது படத்தில் நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.
அதன்படி நேற்று வெளியான இப்படம் முதல் காட்சி முடிந்ததுமே பாசிட்டிவ் விமர்சனங்களை வாரி குவித்தது. இதற்கு முக்கிய காரணம் படத்தில் இருக்கும் நகைச்சுவை தான். அந்த வகையில் குடும்பத்தோடு என்ஜாய் செய்து பார்க்கக்கூடிய வகையில் அலப்பறையாக இருக்கிறது இந்த மார்க் ஆண்டனி.
Also read: ஜெயிக்கிற லாஜிக்கை ஒரு வழியாக கண்டுபிடிச்ச விஷால்.. விட்டுக் கொடுத்து கெட்டுப் போகாத மார்க் ஆண்டனி