திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தோல்வியால் சரிந்த மார்க்கெட்.. பார்ட் 2 மூலம் பதிலடி கொடுக்கும் செல்வராகவன்

பல படங்களை இயக்கி வெற்றி கண்ட செல்வராகவன் தற்போது படங்களில் நடிக்கவும் ஆரம்பித்து விட்டார். அவ்வாறு அவர் நடிப்பில் வெளிவந்த படம் தான் பகாசுரன். இப்படம் இவருக்கு பெரிதளவு கை கொடுக்காமல் நெகட்டிவ் விமர்சனத்தையும் பெற்று தந்தது.

மேலும் இவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வந்த நானே வருவேன் படமும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெறவில்லை. தொடர்ந்து இது போன்ற தோல்வியால் மார்க்கெட் சரிந்த இவர் தற்பொழுது 7 ஜி ரெயின்போ காலனி பார்ட் 2 வை கையில் எடுத்துள்ளார். இப்படம் மூலம் இழந்த பெயரை மீட்பேன் என்ற நம்பிக்கையை உண்டாக்கி வருகிறார்.

Also Read:சிம்பு ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம்.. ரெண்டு பட வெற்றியால் தனுஷை ஓவர்டெக் செய்த எஸ் டி ஆர்

தற்போது இதற்கான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முடிந்துள்ளது. அந்த வகையில் முதல் பாகத்தில் நடித்த ரவிகிருஷ்ணா இந்த படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கிறார். அதற்காக இவர் தற்போது பயங்கர ஒர்க்கவுட் எல்லாம் செய்து தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கிறாராம்.

மேலும் இரண்டாம் பாகத்தில் சோனியா அகர்வால் இடம்பெறுவதற்கு சாத்தியம் இல்லை. அதனால் அவரின் இடத்தை நிரப்ப இயக்குனர் ஹீரோயின் வேட்டையில் ஈடுபட்டுள்ளார். இப்படி செல்வராகவன் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகிறாராம்.

Also Read:வாழ்க்கையிலும் அடி, சினிமாவிலும் அடி.. அண்ணனை தூக்கி விட தனுஷ் எடுத்த முடிவு

இது ஒரு புறம் ரசிகர்களுக்கு சந்தோசமாக இருந்தாலும் ஆயிரத்தில் ஒருவன் 2 அப்டேட் எப்போது தான் வரும் எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏனென்றால் முதலில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தான் இயக்குவதாக செல்வராகவன் குறிப்பிட்டு இருந்தார். அதனால் தனுஷ் ரசிகர்களும் ஆர்வத்துடன் இருந்தார்கள்.

இப்போது திடீரென 7ஜி ரெயின்போ காலனி 2 உருவாக போகிறது என வெளிவந்துள்ள தகவல்கள் அவர்களை குழப்பம் அடைய வைத்துள்ளது. இருப்பினும் செல்வராகவன் விரைவில் ஆயிரத்தில் ஒருவன் 2 வை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:வருஷம் போனாலும் வயது குறையாத சோனியா அகர்வால் புகைப்படம்.. இப்பவும் கைவசம் 4 படங்கள்

Trending News