ஒரே நேரத்தில் அப்பனுக்கும் மகனுக்கும் பேசப்படும் கல்யாணப் பேச்சு.. மானங்கெட்ட குடும்பமா இருக்கே

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் பேரப்பிள்ளை எடுக்கிற வயதில் தன்னுடைய முன்னாள் காதலியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், 25 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த மனைவி மற்றும் தலைக்கு மேல் வளர்ந்த 3 பிள்ளைகளை விட்டுவிட்டு இரண்டாவது திருமணத்திற்கு கோபி, புது மாப்பிள்ளை கோலத்தில் ரெடியாகி நிற்கிறார்.

கோபிக்கு வீட்டில் வயதுக்கு வந்த பெண் இருக்கிறார் என்ற நினைப்பு கூட இல்லை, விவாகரத்திற்கு பிறகு வீட்டை விட்டு வெளியேறி  ஹோட்டலில் தங்கி ராதிகாவுடன் சேர்ந்து வாழ்வதற்காக இல்லாத நாடகம் எல்லாம் போட்டுக் கொண்டிருக்கிறார்.

Also Read: டிஆர்பி-யில் தூள் கிளப்பும் சன் டிவி.. டாப் 5லிருந்து துரத்தப்பட்ட விஜய் டிவி சீரியல்கள்

இதனால் ராதிகாவின் அண்ணன் கோபியை வீட்டிற்கு வரவைத்து ராதிகா-கோபி இருவருக்கும் திருமணம் நடத்துவதற்காக ஜோசியரிடம் நாள் பார்க்க செல்கின்றனர். ஆனால் ராதிகா இந்த திருமணத்தில் விருப்பம் காட்டாமல் இருக்கிறார்.

அதற்கு மாறாக ஜெட் வேகத்தில் இருக்கும் கோபி, ராதிகாவின் அண்ணன் அம்மாவை கைக்குள் போட்டுக்கொண்டு சீக்கிரம் திருமணம் செய்து கொள்வதற்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறார். அதேசமயம் கோபியின் இரண்டாவது மகன் எழில் கைக்குழந்தையுடன் விதவையாக இருக்கும் அமிர்தாவை காதலிக்கிறார்.

Also Read: கரண்ட் பில் கட்ட கூட வக்கில்ல பாக்யா.. ஏளனமாகப் பேசிய கோபியின் வாரிசு

அவரை குடும்பத்தின் சம்மதத்துடன் திருமணம் செய்யும் எண்ணத்தில் இருக்கிறார். இதற்காக அமிர்தா தன்னுடைய மாமனார் மாமியாரிடம் எழிலின் குடும்பத்தினர் தன்னை நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள். அதிலும் மாமியார் பாக்யா தங்களது திருமணத்திற்கு எந்த தடையும் இல்லாமல் சிறப்பாக நடத்த உதவி செய்வார் என்றும் நம்பிக்கையுடன் இருக்கிறார்.

ஒரு பக்கம் மகன் மறுபக்கம் அப்பன் என இருவரின் திருமணப் பேச்சும் ஒரே நேரத்தில் பாக்கியலட்சுமி சீரியலின் பேசப்படுவதால், மானங்கெட்ட குடும்பமா இருக்குதே என நெட்டிசன்கள் இந்த சீரியலை சோஷியல் மீடியாவில் பங்கம் செய்கின்றனர்.

Also Read: பாக்யாவின் பெட்ரூமிற்குள் வந்த எக்ஸ் புருஷன்.. பீறிக்கிட்டு வந்த ஆசை!