புதன்கிழமை, ஜனவரி 22, 2025

மூணு படத்துல ரொமான்ஸ் பண்ணியும் கண்டுக்க மாட்டேங்குறார்.. வருத்தத்தில் திருமணமான 34 வயது நடிகை

திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் அந்த நடிகை சமீபகாலமாக ஒரு முன்னணி நடிகரை மீண்டும் தன் பக்கம் திருப்புவதற்காக பல்வேறு முயற்சிகள் எடுத்தும் தோல்வியை தழுவியுள்ளதால் வருத்தத்தில் இருக்கிறாராம்.

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது அக்கட தேசத்தில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் நடிகை தான் அவர். அங்கேயே ஒரு நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகும் அந்த நடிகர் நடிப்பதற்கு பர்மிஷன் கொடுத்துவிட்டதால் எல்லை மீறிய கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறாராம் அம்மணி. சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் அதற்கு மேல் உள்ளது.

பட வாய்ப்புகள் கணிசமாக கிடைத்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு முன்னணி நடிகர்களின் படவாய்ப்பு அந்த நடிகையை தேடி சமீபகாலமாக சுத்தமாக வரவில்லை என்பதை உணர்ந்த நடிகை தன்னுடன் ஏற்கனவே நடித்த முன்னணி நடிகர்களுக்கு வலைவீசி வருகிறாராம்.

அதிலும் குறிப்பாக தற்போது கோலிவுட்டில் உச்சத்தில் இருக்கும் நடிகர் ஒருவருடன் ஏற்கனவே மூன்று படங்களில் ஜோடி போட்டுள்ளார். இவர்களது ஜோடி வேறு சூப்பராக இருக்கிறது என பலரும் கூறி வருகின்றனர். இதன் காரணமாக மீண்டும் அந்த நடிகரின் படத்தை கைப்பற்றிவிட வேண்டும் என சமீபகாலமாக முயற்சி செய்து வந்துள்ளார்.

தற்போது அந்த நடிகர் பெரிய நிறுவனம் தயாரிக்கும் பிரமாண்ட படத்தில் நடித்து வருகிறார். இளம் இயக்குனர் இயக்கும் அந்த படத்தில் பிரபல நடிகருக்கு ஜோடியாக அக்கட தேசத்தில் டாப் நடிகையாக வலம் வருபவர் ஒப்பந்தமாகியுள்ளார். முதலில் அந்த வாய்ப்பை எப்படியாவது தட்டிப் பறித்துவிட வேண்டும் என நினைத்த அந்த நடிகையின் கனவு கனவாகவே போய்விட்டது. இதனால் மீண்டும் சோகமே சுமையாக தன்னுடைய நண்பர்களிடம் புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

Trending News