வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

பண்டிகையை கொண்டாடுங்கலே.. மார்வெல் ரசிகர்களுக்காக புதிய சலுகை

டாம் ஹார்டியின் ’வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் இறுதிப் படம் அக்டோபர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தியா அறிவித்துள்ளது. சமீபத்தில், ரசிகர்களை உற்சாகப்படுத்த, வெனோம் மற்றும் விமானத்தின் மேல் உள்ள ஜெனோமார்ப் இருவரும் இருக்கும்படியான போஸ்டரும் வெளியாகியுள்ளது.

’வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்திற்கான முன்பதிவுகள் கடந்த அக்டோபர் 18 வெள்ளிக்கிழமை தொடங்கியது. டாம் ஹார்டியின் ஆன்டி ஹீரோ கடைசிப் பாகமான ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ திரைப்படம் த்ரில்லான ஆக்‌ஷன் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் விஷயங்களைக் கொண்டிருக்கிறது.

பண்டிகையை கொண்டாடும் ரசிகர்கள்

மார்வெல் ஆன்டி ஹீரோ வெனோமின் ரசிகர்கள் மகிழ்ச்சியடையும் விதமாக, சமீபத்தில் ஒரு அப்டேட் வந்தது. அதிக எதிர்பார்ப்பில் உள்ள ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ திரைப்படம் இந்தியாவில் உலகளாவியான வெளியீட்டுத் தேதிக்கு ஒரு நாள் முன்னதாக வெளியாகிறது. டாம் ஹார்டியின் இந்த படத்தின் இறுதிப் படம் அக்டோபர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தியா அறிவித்துள்ளது.

மார்வெலின் மிகச்சிறந்த மற்றும் மிகவும் சிக்கலான கதாபாத்திரங்களில் ஒன்றான வெனோமாக டாம் ஹார்டி மீண்டும் ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸி’ல் வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் வெளியான அப்டேட் ஒன்று ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது.

சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தியா, அக்டோபர் 24, 2024 அன்று இந்தியத் திரையரங்குகளில் ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸை’ பிரத்தியேகமாக வெளியிடுகிறது. ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 3D மற்றும் ஐமேக்ஸ் 3Dயிலும் படம் வெளியாகிறது. உலகெங்கிலும், 25 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தியாவில் ஒரு நாளைக்கு முன்பே ரிலீஸ் ஆவது, ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தற்போது ரசிகர்கள் இதை பண்டிகையை போல கொண்டாடி தீர்க்கின்றனர்.

Trending News