வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ரோலக்ஸை மிஞ்சும் கதாபாத்திரம்.. தளபதி 67 இல் மாஸ் நடிகருக்கு கொக்கி போட்ட லோகேஷ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது விக்ரம் படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என முன்னணி திரை பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். விக்ரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் விஜய்யின் தளபதி 67வது படத்தை இயக்கயுள்ளார்.

விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகயுள்ளது.

அதே நாளன்று தளபதி 67 படத்திற்கான அப்டேட்டும் வெளியாக உள்ளது. இந்நிலையில் விக்ரம் படத்தில் லோகேஷ் கைதி படத்தில் உள்ள சம்பவங்கள் மற்றும் கதாபாத்திரங்களை இணைத்திருந்தார். அதேபோல் தளபதி 67 படத்தில் மாஸ்டர் படத்தின் தொடர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஐந்து நிமிடங்கள் மட்டுமே தான் சூர்யாவின் காட்சிகள் என்றாலும் அனைவரையும் மிரள செய்துவிட்டு சென்றார். அதேபோல் தளபதி 67 படத்தில் தனுஷ் நடிக்கயுள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

தற்போது தனுஷ் நானே வருவேன் மற்றும் திருச்சிற்றம்பலம் படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாக உள்ள கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது தளபதி 67 படத்தில் தனுஷ் கேமியோ தோற்றத்தில் நடிக்கயுள்ளார் என்ற செய்தி வெளியாகி அவரது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. இதுவரை விஜய் மற்றும் தனுஷ் ஒரே திரையில் காட்சி அளிக்காத நிலையில் தளபதி 67 படத்தில் லோகேஷ் தரமான சம்பவம் செய்யுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது

Trending News