புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அடுத்த 300 கோடி வசூலுக்கு தயாரான சிவகார்த்திகேயன்.. உறுதியான SK21 மாஸ் கூட்டணி

சிவகார்த்திகேயனின் படத்தை தயாரிக்க பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு வருகிறது. ஏனென்றால் சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் படங்கள் தொடர்ந்து வெற்றி வாகை சூடியது மட்டுமல்லாமல் 100 கோடியை தாண்டி வசூல் வேட்டை ஆடியது.

இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் பிரின்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தில் உக்ரைன் நாட்டு மாடல் அழகி மரியா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பல வருடங்களுக்குப் பிறகு சத்யராஜ் பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்துவருகிறார்.

இப்படம் தீபாவளி ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தற்போது சிவகார்த்திகேயனின் SK 21 படத்திற்கான அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் தயாரிக்க உள்ளார். ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சி மேடையில் சிவகார்த்திகேயனின் படத்தை தயாரிக்க உள்ளதாக கமல் அறிவித்திருந்தார்.

மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியின் மூலம் வெள்ளித்திரைக்கு வந்தவர்தான் சாய் பல்லவி.

சின்னத்திரையில் ஒரே தொலைக்காட்சியில் இருந்து வந்த இருவரும் முதல் முறையாக இப்படத்தில் ஜோடி சேர உள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார் என்ற செய்திகள் இணையத்தில் உலாவி வந்தது. ஆனால் சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் தான் இப்படத்திலும் இசையமைக்கயுள்ளார் என்று உறுதிபட தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே வசூல் சாதனை படைத்த சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் படங்களுக்கு அனிருத் தான் இசையமைத்து இருந்தார். அந்த படங்கள் 100 கோடி வசூல் செய்த நிலையில் எஸ்கே 21 படம் 300 கோடி வசூல் செய்யும் என்ற எதிர்பார்ப்பில் சிவகார்த்திகேயன் உள்ளார்.

Trending News