வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

கெத்தா கோலிவுட்டை கலக்கும்  மாஸ் இயக்குனரின் பின்னணி.. சுயம்புவாக முளைத்த லோகேஷ் கனகராஜ்!

Mass director Lokesh success story in Kollywood: தமிழ் சினிமாவின் ட்ரெண்டிங் இயக்குனர் என்றால் அது லோகேஷ் கனகராஜாக மட்டும் தான் இருக்க முடியும் தனக்கென தனி ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி கெத்தாக வலம் வருகிறார் இந்த இயக்குனர்.

 முன்னணி நடிகருக்கு இணையாக இந்த இயக்குனர் வந்தாலே  அரங்கம் அதிர வைக்கும் கரகோஷங்களுடன் இன்றைய தலைமுறையினரை தன்வசம் ஆக்கிவிட்டார் லோகேஷ்.  

தரமான திரைக்கதையை அதிரடி ஆக்சன் களுடன் கலந்து நினைத்துபாராத வியப்பை ஏற்படுத்தி,

விறுவிறுப்பான திருப்பங்களுடன்  இருக்கை நுனியில் அமர வைக்கும் இந்த இயக்குனர், யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியாமலே தமிழ் சினிமாவில் தடம் பதித்துள்ளார் என்பது ஆச்சரியத்திற்குரிய தகவல்.

இன்றைய முன்னணி இயக்குனர்கள் பலரும், பலரிடமும் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்து அந்த அனுபவத்தின் மூலமாகவே திரைத்துறையில் என்ட்ரி கொடுத்து உள்ளனர். 

ஆனால் லோகேஷ் இன்றைய இளைஞர்களின் நாடித்துடிப்பை அறிந்து படம் இயக்குவதில் வல்லவர்.

மாநகரம் படத்தின் வாய்ப்பை பெற்றுக் கொடுத்த  குறும்படம் 

முதலில் தனது 2012 “அச்சம் தவிர்” என்ற குறும்படத்தின் மூலமாக பலரின் கவனத்தையும் கவர்ந்தார் லோகேஷ். 

இக்குறும்படம்  ஷார்ட் பிலிம் பெஸ்டிவல்லில் சிறந்த இயக்குனர், சிறந்த கதை என பல்வேறு வகைகளிலும் விருதுகளை தட்டி சென்றது.

இதற்கு பின்னும் களம் உள்ளிட்ட பல குறும்படங்களை இயக்கினார்  லோகேஷ். இதன் மூலம் மாநகரம் படத்திற்கான வாய்ப்பு தானாகவே அமைந்தது எனலாம். 

குறும்படம் இயக்கிய சமயத்தில் தன் நண்பர்களின் உதவியின் மூலமாகவே படங்களை இயக்குவது, வெளியிடுவது என பல பணிகளை மேற்கொண்டாராம்.

இதற்கு கைம்மாறாக தனது முதல் படமான மாநகரத்திற்கு அவர்களை உதவி இயக்குனர்களாக சேர்த்துக் கொண்டாராம் லோகேஷ்.

மாநகரப் படத்தின் நேர்மறையான விமர்சனங்களுக்கு பின் அடுத்தடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என பல முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து வெற்றிப் படிகளில் ஏறத் தொடங்கினார் லோகேஷ்.

இவரது முக்கிய பலமாக  ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா உள்ளார்.  இந்த காஸ்ட்லியான ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தான் வேண்டுமென்று தயாரிப்பாளர்களிடம் டிமாண்ட் வைத்து விடுவாராம் லோகேஷ். 

கூடுதல் சிறப்பாக  வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களுக்காக ஜீ ஸ்குயட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளார் லோகேஷ். இதன் முதல் படமாக உறியடி விஜயகுமாரின் பைட் கிளப் அமைந்தது.

நாலு பேருக்கு நல்லது செய்யனும் என்கிற நினைப்பில் தான் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளேன் என்று மனம் திறந்து பேசினார் லோகேஷ்.

- Advertisement -spot_img

Trending News