புதன்கிழமை, ஜனவரி 8, 2025

இளையராஜா பயோபிக் என்னால் மட்டுமே எடுக்க முடியும்.. மாஸ் இயக்குனரை விட்டுட்டு டம்மியா படம் பண்ணும் படக்குழு

Iliayaraja Biopic Movie: சினிமாவில் எத்தனை வருடங்கள் ஆனாலும் எவ்வளவு முறை கேட்டாலும் சலிக்காத ஒரு விஷயம் என்றால் அது இளையராஜா மெட்டு அமைத்த பாடல்கள் தான். தமிழ் சினிமா இசையில் மிகப்பெரிய அடையாளமாக கடந்த ஐந்து தலைமுறையாக இசைஞானியாக பயணித்து வருகிறார்.

அப்படிப்பட்ட இசைஞானியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து அதில் தனுஷ், இளையராஜாவாக பயோபிக் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கேப்டன் மில்லர் படத்தை எடுத்த அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அதில் தனுஷ் ஹார்மோனி பெட்டியை கையில் வைத்திருப்பது போல் வந்தது.

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் துவங்க இருக்கிறது. மேலும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மாஸ் இயக்குனர் ஒருவர் கூறிய விஷயம் பலரையும் அதிர்ச்சியாக்கி இருக்கிறது.

ஆணித்தரமாக கூறிய மாஸ் இயக்குனர்

அதாவது இளையராஜா பயோபிக் படத்தை என்னால் மட்டுமே 100% எடுக்க முடியும் என்று கூறியிருக்கிறார். அவர் வேறு யாருமில்லை கௌதம் மேனன். அதாவது நீதானே என் பொன்வசந்தம் படத்தை எடுக்கும் பொழுது இதற்கான ரெக்கார்டிங் வேலைகள் அனைத்தும் லண்டனில் நடந்திருக்கிறது.

அப்பொழுது கௌதம் மேனனும் இளையராஜாவும் கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை பணியாற்றி இருக்கிறார்கள். அப்படி அந்த ஒரு மாதத்தில் இளையராஜாவுடன் நெருங்கி பழகியதால் அவரைப் பற்றி அனைத்து விஷயங்களும் எனக்கு நுணுக்கமாக தெரியும்.

அதை வைத்து அவருடைய பயோபிக் படத்தை வெற்றியாக என்னால் மட்டும் கொடுக்க முடியும் என்ற அடித்துக் கூறுகிறார். இப்படி இவர் சொல்வதை பார்க்கும் பொழுது இவரே இந்த படத்தை எடுத்திருக்கலாமே என்று தோன்றுகிறது.

ஏனென்றால் கௌதம் மேனன் வெற்றி படமாக கொடுப்பது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் இளையராஜாவை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறேன் என்று ஆணித்தரமாக கூறியிருக்கிறார்.

அப்படிப்பட்ட கௌதம் மேனனை விட்டுவிட்டு தற்போது ஒரு டம்மியான இயக்குனரை வைத்து மொத்த சூட்டிங்கும் நடக்கப் போகிறது. ஒருவேளை அருண் மாதேஸ்வரன் தனுஷை வைத்து வெற்றியாக இளையராஜாவின் பயோபிக் படத்தை கொடுத்து விட்டால் கண்டிப்பாக சாதனை படைத்த அளவிற்கு பேசப்படும்.

Trending News