மாஸ் எண்ட்ரி, பாலிவுட் ஹீரோக்களுக்கு டஃப்.. தனுஷ் இடத்தைப் பறிக்கும் சூர்யா

suriya-dhanush
suriya-dhanush

இந்திய சினிமாவில் ஒரு மொழியில் சிறந்த நடிகராக இருந்தால் மற்ற மொழிகளிலும் நடிக்க அழைப்பு வரும். அதேபோல், சூர்யா தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் நிலையில் அவர் பாலுவுட்டில், சூரரைப் போற்று படத்தை அக்‌ஷய்குமார் நடிப்பில் ரீமேக் செய்து தயாரிப்பாளராக அறிமுகமானார். விரைவில் புதிய படத்திலும் நடிக்கவுள்ளார்.

கங்குவா படத்தின் புரமோசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சூர்யா, சிவா உள்ளிட்டோர் இப்படத்தைப் பற்றியும் அடுத்து வரவுள்ள அவர்களின் படங்கள் பற்றியும் அப்டேட் கொடுத்து வருகின்றனர்.

இந்தி படத்தில் நடிப்பது பற்றி சூர்யா பேட்டி

அந்த வகையில், சமீபத்தில் சூர்யா அளித்த பேட்டியில், நேரடி இந்திப் படம் ஒன்றில் நடிப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்திப் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இப்பட ஷூட்டிங் தொடங்கும் முன்பு பல விசயங்கள் பேசி முடிவாக வேண்டியுள்ளது. இப்படத்தின் வேலைகள் ஓராண்டுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டு நடந்து வருகிறது.

இது எனது முதல் இந்திப் படம். அதுபற்றி இப்போது கூற முடியாது. அதைப் பற்றி புரடியூசர்ஸ் அறிவித்தால்தான் சரியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் தான் சூர்யா புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகிறது. சமீபத்தில், சூர்யா – ஓம்பிரகாஷ் மெஹ்ரா ஆகியோர் சந்திப்பு மும்பையில் நடந்தது. இதுகுறித்த புகைப்படங்களும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

தனுஷுக்கு போட்டியாகும் சூர்யா?

தமிழில் இருந்து தனுஷ் ஏற்கனவே பாலுவுட்டுக்கு சென்று சில படங்களில் நடித்த நிலையில் தற்போது சூர்யா தனுஷுக்கு போட்டியாக பாலிவுட்டுக்கு செல்கிறார் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இங்கிருந்து அங்கு செல்வது முக்கியமல்ல. அங்கு சென்று பேர் சொல்லும்படியாக நிலைத்து நின்று நடிப்பு திறமையை நிரூபிப்பது எல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் அங்குள்ள அரசியலில் இவர்கள் எப்படி தாக்குப்பிடிப்பார்களா? என சினிமா விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement Amazon Prime Banner