வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சிவகார்த்திகேயனுக்கு டஃப் கொடுக்க இவரால் மட்டுமே முடியும்.. பிரின்ஸ் படத்தை தூக்கி சாப்பிட்ட பிசினஸ்

நம்ம வீட்டு பிள்ளையாக உருமாறி நிற்கிறார் சிவகார்த்திகேயன். பெரியவர் இடத்தை பிடிக்கக் கூடிய தகுதியில் இவருக்கும் ஒரு சான்ஸ் இருக்கு என்றெல்லாம் வேற பேச்சு அடிபடுகிறது. சமீபத்தில் அவர் வேற மாதிரி உருவாகிக் கொண்டிருக்கிறது.

சிவகார்த்திகேயனுக்கு ஹீரோயினாக நடித்து விட வேண்டும் என்று எல்லா நடிகைகளும் போட்டி போடும் அளவிற்கு வளர்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன். அவருடைய படங்கள் எல்லாமே குறைந்தது நூறு கோடிகள் வியாபாரமாகி கல்லாப் பெட்டியை நிரப்புகிறது.

Also Read :சிவகார்த்திகேயனை புறக்கணித்த பிரபல சேனல்.. சரியான நேரத்தில் கொடுத்த பதிலடி

தயாரிப்பாளர்கள் அனைவரும் இவரது கால்ஷீட் கிடைக்காதா என்று ஏங்கி வரும் நிலையில் அவரும் பல கண்டிஷன்கள் போடுகிறார். அதில் ஒன்று நீங்கள் சொந்த பணத்தில் படம் எடுக்கிறீர்களா என்பதுதான். ஏனென்றால் பல பேர் அவரை சிக்கலில் மாட்டி விட்டு விட்டனர்.

அப்பேர்ப்பட்ட சிவகார்த்திகேயன் வியாபாரத்தை கூட சமீபத்தில் தனுஷின் படம் ஓரங்கட்டி உள்ளது. தனுஷ் ஒன்னும் சாதாரண ஆள் கிடையாது, அவர் படத்திற்கும் எப்போதுமே மாஸ் ஓபனிங் இருக்கிறது, ஏற்கனவே கர்ணன், அசுரன் போன்ற படங்களால் அவர் லெவlலும் வேறு மாதிரி உருவாகிக் கொண்டிருக்கிறது.

Also Read :சிம்புவை வம்பு இழுக்கும் தனுஷ்.. அப்பதான் ஆட்டம் சூடு பிடிக்கும்

இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன் வெளியான திருச்சிற்றம்பலம் படம் சக்கை போடு போட்டது. குறைந்த பட்ஜெட்டில் சரியான லாபத்தைப் பெற்றுத் தந்த அந்த படம் தனுஷின் மார்க்கெட்டை இன்னும் அதிகப்படுத்தியது. இப்பொழுது தனுஷ் நடித்து கொண்டிருக்கும் படம் வாத்தி இந்த படத்தின் பிசினஸ்சும் எகிறியுள்ளது,

வாத்தி படத்தில் தனுஷ் வாத்தியாராகக நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் வெளியாகி சக்கை போடு போட்டது. சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் 90 கோடி ரூபாய் வியாபாரமானது. ஆனால் பயங்கரப் போட்டி நிலவிய தனுஷ் படத்தை “ஆஹா ஒடிடி” 127 கோடி ரூபாய் கொடுத்து கைப்பற்றியது. இதனால் சிவகார்த்திகேயனுக்கு சரியான போட்டி கொடுக்கும் ஒரு நடிகர் என்றால், தனுஷ் மட்டுமே தான் என்று பேசி வருகிறார்கள்.

Also Read :உருவ கேலிக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகை.. தனுஷ், விஜய் சேதுபதி ஒப்பிட்டு ஆவேசம்

Trending News