திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

விஜய் சேதுபதியை இயக்க வரும் மாஸ் ஹீரோவின் வாரிசு.. படு சீக்ரெட்டாக நடக்கும் வேலை

விஜய் சேதுபதி இப்போது நிற்க கூட நேரம் இல்லாமல் பம்பரமாக சுழன்று நடித்து வருகிறார். தமிழில் அதிக கவனம் செலுத்தி வந்த இவர் இப்போது ஹிந்தி திரைப்படங்களிலும் அதிகமாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதன் காரணமாகவே இவர் இப்போது சென்னைக்கும், மும்பைக்கும் பறந்து கொண்டிருக்கிறாராம்.

இந்நிலையில் மாஸ் ஹீரோ ஒருவரின் வாரிசு இவரை வைத்து படம் இயக்க தயாராகி வருகிறார். தன் அப்பா பெரிய ஹீரோவாக இருந்தாலும் விஜய் சேதுபதியை இயக்க வேண்டும் என்பதுதான் அந்த வாரிசின் மிகப்பெரிய ஆசையாக இருக்கிறது. அதனாலேயே அவரின் ஆசைக்கு அந்த நடிகரும் பச்சைக்கொடி காட்டி இருக்கிறார்.

Also read: பிகிலைத் தொடர்ந்து வசூலில் முத்திரை பதித்த வாரிசு.. யாரும் தொட்டுப் பார்க்க முடியாத சாதனையில் விஜய்

அந்த வாரிசு வேறு யாரும் அல்ல மாஸ் ஹீரோவான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தான். தற்போது குறும்படங்களை இயக்கி வரும் இவர் விரைவில் கோலிவுட்டில் இயக்குனராக களம் இறங்க இருக்கிறார். தற்போது கனடாவில் படித்து வரும் சஞ்சய் அங்கு நண்பர்களுடன் இணைந்து குறும்படம் இயக்கும் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி வைரலானது.

அதைத்தொடர்ந்து அவர் அடுத்ததாக அப்பா வழியில் ஹீரோவாக மாறுவாரா இல்லை தாத்தா வழியில் இயக்குனராக மாறுவாரா என பெரும் விவாதமே ஏற்பட்டது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சஞ்சய் இயக்குனர் பாதையை தான் தேர்ந்தெடுத்துள்ளார். இதற்கு முழு சம்மதம் தெரிவித்துள்ள விஜய் தன் வாரிசுக்காக தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார்.

Also read: 26 நாட்களை தாண்டியும் ஆதிக்கம் செலுத்தும் வாரிசு, துணிவு.. பின்னுக்கு தள்ளப்பட்ட மூன்று வார புதிய படங்கள்

மகன் இயக்கும் குறும்படத்தை தயாரிக்கும் விஜய் அடுத்ததாக சஞ்சய் இயக்கப் போகும் படத்தையும் தயாரிப்பார் என்று கூறப்படுகிறது. இதற்கான வேலைகள் அனைத்தும் தற்போது படு சீக்ரட்டாக நடந்து வருகிறதாம். மேலும் விஜய் சேதுபதியும் இதற்கு சம்மதம் தெரிவித்து விட்டதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.

அந்த வகையில் எப்போது வேண்டுமானாலும் இதன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரலாம் என்கிறது திரையுலக வட்டாரம். இது விஜய் ரசிகர்களை ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இவ்வாறு இயக்குனராக அறிமுகமானாலும் சஞ்சய் நிச்சயம் அப்பா வழியில் ஹீரோ அவதாரம் எடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

Also read: தளபதி 67 விஜய்க்கு மட்டும் ஸ்பெஷல் இல்ல, த்ரிஷாவுக்கு அதைவிட ஸ்பெஷலாம்.. செம மேட்டரா இருக்கே!

Trending News