வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அடுத்தடுத்து 4 பட தோல்வியால் லோகேஷ் இடம் சரணடைந்த மாஸ் ஹீரோ.. விட்டுக் கொடுத்த ரோலக்ஸ் சூர்யா

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்தடுத்த இப்படத்தின் குறித்த அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் காத்து வருகின்றனர். இதனிடையே சூர்யா ரோலக்ஸாக எப்போது முழு படத்தில் நடிக்க போகிறார் என்ற கேள்வியும் ரசிகர்களிடம் உள்ளது. இந்த நிலையில் கூடிய விரைவில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாகும் ரோலக்ஸ் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியாகியுள்ளது.

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் கிளைமாக்சில் 5 நிமிடமே தோன்றும் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றது. இதனிடையே லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் இணைந்து சூர்யா ரோலக்ஸ் படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளார். அதே சமயத்தில் இவர்கள் இருவரும் இணைந்து முதன்முதலாக இரும்பு கை மாயாவி என்ற படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தனர்.

Also Read: சூர்யாவை டீலில் விட்டாரா வெற்றிமாறன்.? வருஷ கணக்கில் காக்க வைத்த வாடிவாசல், எதிர்பாராத ஷாக்

ஆனால் அப்படம் பல வருடங்களாக கிடப்பில் இருந்த நிலையில், தற்போது மீண்டும் இப்படத்தை குறித்த அப்டேட் வெளியாகி வருகிறது. அந்த வகையில் சூர்யா ரோலக்ஸ் படத்தில் முதலில் நடிக்க உள்ளதாகவும், அதன் பின் இரும்பு கை மாயாவி படத்தில் நடிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் தற்போது இப்படத்தில் அக்கட தேசத்து நடிகர் ஒருவர் நடிக்க கமிட்டாக உள்ளாராம்.

சமீப காலமாக அக்கட தேசத்து நடிகர்கள் தமிழ் சினிமாவில் காலூன்றி ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். உதாரணமாக பகத் பாசில், துல்கர் சல்மான் உள்ளிட்ட நடிகர்களும், ஜெயிலர் படத்தின் மூலமாக ரசிகர்களை கவர்ந்த மோகன்லால், விநாயகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட நடிகர்கள் தமிழ் ரசிகர்களை அசால்ட்டாக தங்கள் நடிப்பால் கவர்ந்து வருகின்றனர்.

Also Read: சூர்யாவுக்காக ரெண்டு தரமான சம்பவத்தை செய்ய போகும் லோகேஷ்.. ஹாலிவுட் அளவுக்கு எகிற போகும் மார்க்கெட்

அந்த வகையில் தொடர்ந்து நான்கு படங்கள் தோல்விக்கொடுத்த பிரபல நடிகர் தற்போது வேறு வழியில்லாமல் சூர்யாவின் இரும்பு கை மாயாவி படத்தில் சூர்யாவுக்கு பதிலாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பாகுபலி படங்களின் மூலமாக இந்திய அளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ் அப்படத்தை தொடர்ந்து ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சாஹோ உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் இப்படங்கள் இவருக்கு மாபெரும் தோல்வியை கொடுத்தது.

இப்படியே சென்றால் தனது மார்க்கெட் என்னவாகும் என பயந்துபோன பிரபாஸ், லோகேஷ் கனகராஜிடம் பேசி இரும்பு கை மாயாவி படத்தில், தான் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய சூர்யாவும் பிரபாஸுக்காக அந்த படத்தை விட்டுக்கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருபக்கம் சூர்யாவின் விட்டுக்கொடுத்த குணம் பாராட்டப்பட்டாலும், அப்படத்தில் சூர்யாவை வைத்து பார்த்த ரசிகர்கள், பிரபாஸை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்ற நெருடலும் உள்ளது.

Also Read: இதிகாச நாயகனாக முத்திரை குத்தப்பட்ட பிரபாஸ்.. தொடர்ந்து வம்பில் மாட்டும் பாகுபலி நாயகன்

Trending News