வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

கர்ணன் படத்தின் மாஸ் அப்டேட்.. மரண வெயிட்டிங்கில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் தற்போது உள்ள நடிகர்களில் மிகவும் பிஸியான நடிகர் என்றால் அது தனுஷ் தான். ஏனென்றால் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என சினிமா துறையில் சாதனை புரிந்து வருகிறார் தனுஷ்.

அதேபோல் தனுஷின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் அவருடைய கடின உழைப்பும், அயராத முயற்சியும் தான். இந்த நிலையில் நடிகர் தனுஷ் நடித்திருக்கும் கர்ணன் படத்தை பற்றிய சூப்பர் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

அதாவது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் கர்ணன். இந்தப்படம் தேயிலைத் தோட்ட வேலைக்காரரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாம்.

மேலும் இந்தப் படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போட்டு இருக்கிறார்களாம் படக்குழுவினர். தற்போது கர்ணன் படத்தின் அப்டேட் நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. அது படத்தின் டீசரா? டிரெய்லரா? அல்லது வெளியீட்டு தேதியா? என்று ரசிகர்கள் அனைவரும் ஒருபுறம் குழப்பத்தில் இருந்தாலும், மறுபுறம் மகிழ்ச்சியில் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

karnan-cinemapettai

ஏனென்றால் தனுஷின் ஜகமே தந்திரம் படத்திற்கான எதிர்பார்ப்பை விட கர்ணன் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் பலரின் மத்தியில் அதிக அளவில் காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் அந்தப் படத்தின் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கண்ணன் படத்தை புகழ்ந்து கூறிய தான் என்றும் சொல்லப்படுகிறது.

எனவே எக்கச்சக்க எதிர்பார்ப்பை பெற்றிருக்கும் கர்ணன் படத்திற்கான சிறப்பை அப்டேட்டை ரசிகர்கள் பலர் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Trending News