பல போராட்டங்களுக்கு பிறகு தியேட்டரில் வெளியான மாஸ்டர் திரைப்படம் அடுத்த இரண்டே வாரத்தில் அமேசான் தளத்தில் வெளியாகும் செய்திதான் தற்போது தியேட்டர் உரிமையாளர்கள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே தியேட்டர்காரர்கள் தான் ஒரு வாரத்திற்கு முன்பு, விஜய் தான் கடவுள் சாமி என தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர்.
ஆனால் தற்போது தங்களுடைய தொழில் பாதிக்கப் போகிறது என தெரிந்தவுடன் விஜய் மற்றும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர்களை திட்டித் தீர்க்கின்றனர். ஆனால் தியேட்டர்காரர்கள் மாஸ்டர் பட தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்ததால்தான் தயாரிப்பாளர் இப்படி ஒரு முடிவை எடுத்ததாக கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.
மாஸ்டர் படத்தை வைத்து பல கோடி சம்பாதித்த தியேட்டர்காரர்கள் பேசியபடி பணத்தை திருப்பிக் கொடுக்க வில்லையாம். வேண்டுமென்றே நஷ்டக் கணக்கை காட்டுவதாக தயாரிப்பாளர் மிகவும் வருத்தப்பட்டுள்ளார். இது சம்பந்தமாக தளபதி விஜய்யிடம் பேச, அவரும் யோசித்துப் பின் அமேசான் தளத்தில் வெளியிட ஒப்புக் கொண்டுள்ளாராம்.
தியேட்டரில் வெளியான படங்கள் அமேசான் போன்ற OTT தளங்களில் வெளியாவதற்கு குறைந்தது 30 நாட்களுக்கு மேலாக வேண்டுமாம். ஆனால் மாஸ்டர் படம் வெளியான 16-வது நாளில் அமேசான் தளத்தில் வெளியாக உள்ளது. இதற்காக அமேசான் நிறுவனம் மாஸ்டர் பட தயாரிப்பாளருக்கு கிட்டத்தட்ட 36 முதல் 40 கோடி வரை பணம் கொடுத்துள்ளதாம்.
மேலும் தியேட்டரில் வெளியாகி அமேசான் தளத்திற்கு வரும் படங்களில் இவ்வளவு பெரிய தொகை இதுவரை அமேசான் நிறுவனம் யாருக்குமே கொடுத்தது கிடையாதாம். அந்தவகையில் தளபதி படத்திற்கு இருக்கும் வரவேற்பை பார்த்துவிட்டு மிரண்டு போய் கேட்ட விலையைக் கொடுத்து வாங்கி இருக்கிறதாம் அமேசான் நிறுவனம்.
முதலில் மாஸ்டர் படத்தின் டிஜிட்டல் உரிமையை விற்றதை விட இரண்டு மடங்கு அதிகமாக அதே அமேசான் தளத்தில் விற்று லாபம் பார்த்து விட்டார்களாம் மாஸ்டர் படக்குழு. இதற்குப் பெயர்தான் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது என காலரை தூக்கிவிட்டு கெத்து காட்டுகிறாராம் தயாரிப்பாளர்.