மாஸ்டர் படம் வெளியானதில் இருந்தே தமிழ் சினிமாவில் உள்ள பல சாதனைகளை நொறுக்கி தள்ளி வருகின்றது. அந்த வகையில் நீண்ட நாட்களாக விஸ்வாசம் திரைப்படம் வைத்திருந்த சாதனையையும் கடைசியாக மாஸ்டர் படம் முறியடித்துள்ளது.
அஜித்துக்கு விஸ்வாசம் எப்படி பல சாதனைகளை புரிந்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததோ அதேபோல் விஜய்க்கு மாஸ்டர் படம் அமைந்துள்ளது. நாளுக்கு நாள் மாஸ்டர் படத்தின் கிரேஸ் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
அதுவும் குறிப்பாக வாத்தி கம்மிங் பாடல் தற்போது திருவிழாக்களில் கொண்டாடப்படும் பாடலாக மாறியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களிடையே வாத்தி கம்மிங் பாடல் செம பிரபலம் ஆகியுள்ளது.
மேலும் விரைவில் ஐபிஎல் தொடங்க உள்ள நிலையில் மற்ற மொழி ஐபிஎல் அணிகளும் வாத்தி கம்மிங் பாடலை தங்களது கொண்டாட்ட பாடலாக ஷேர் செய்து வருகின்றனர். இதனால் விஜய்யின் மாஸ்டர் படம் தற்போது வட இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது.
இதற்கிடையில் விஸ்வாசம் படம் வைத்திருந்த சாதனையை மாஸ்டர் படம் தன்வசம் ஆக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது விஸ்வாசம் திரைப்படம் வெளியாகி 50வது நாளில் கிட்டத்தட்ட 124 தியேட்டர்களில் தமிழ்நாடு முழுவதும் ஓடிக்கொண்டிருந்தது.
ஆனால் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் 50வது நாளில் கிட்டத்தட்ட 134 தியேட்டர்களில் ஓடி அந்த சாதனையை முறியடித்துள்ளது. இதனை தளபதி ரசிகர்கள் இணையதளங்களில் தாறுமாறாக கொண்டாடி வருகின்றனர்.