வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

அமேசானில் சூரரைப் போற்று படத்தை காலி செய்த மாஸ்டர்.. கெத்து காட்டும் தளபதி!

இதுவரை அமேசான் தளத்தில் வெளியான திரைப்படங்களில் இந்திய அளவில் அதிக பார்வையாளர்களை பெற்ற இரண்டாவது படமாக இருந்தது சூரரைப் போற்று. ஆனால் அந்த படத்தை மாஸ்டர் திரைப்படம் வெளியான ஒரு சில நாட்களிலேயே ஓரம் கட்டி விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

ஆரம்பத்தில் சூரரைப் போற்று மற்றும் மாஸ்டர் ஆகிய இரண்டு படங்களும் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரே தேதியில் போட்டியிட இருந்தது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். ஆனால் எதிர்பாராத சூழ்நிலையில் இரண்டு படங்களின் ரிலீஸ் தள்ளி சென்றது.

சில மாதங்கள் பொருத்து பார்த்த சூர்யா சொந்த தயாரிப்பு என்பதால் பெரிய அளவு ரிஸ்க் எடுக்க முடியாது என அமேசான் தளத்திற்கு சூரரைப் போற்று படத்தை விற்றுவிட்டார். படமும் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.

ஆனால் விஜய் பல மாதங்கள் கழித்து நேரடியாக கடந்த பொங்கலுக்கு தியேட்டரில் மாஸ்டர் படத்தை வெளியிட்டார். யாரும் எதிர்பார்க்காத வகையில் மாஸ்டர் திரைப்படம் ஏகப்பட்ட வசூலை வாரி குவித்து விட்டதாம். அதனை தொடர்ந்து அடுத்த இரண்டாவது வாரமே அமேசான் தளத்தில் மாஸ்டர் படம் வெளியானது.

அமேசான் இதுவரை எந்த ஒரு படத்திற்கும் செய்யாத அளவுக்கு ப்ரோமோஷன் செய்தது மாஸ்டர் படத்திற்கு தானாம். தியேட்டரில் வெளியாகியிருந்தாலும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் படத்தைப் போலவே மாஸ்டர் படத்தை விளம்பரம் செய்தது படத்திற்கு பெரிய அளவு உதவி செய்துள்ளதாம்.

இதனால் மாஸ்டர் படம் அமேசான் தளத்தில் வெளியான ஓரிரு தினங்களிலேயே சூரரைப் போற்று படத்தின் மொத்த பார்வையாளர்களையும் கடந்து விட்டதாம். தற்போது வரை மாஸ்டர் படத்தை 66 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

master-sooraraipottru-cinemapettai
master-sooraraipottru-cinemapettai

ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. முன்னணி நடிகர்களின் வசூல் நிலவரங்களை போல இந்த செய்தியும் அதிகாரப்பூர்வமில்லாமல் வந்துள்ளதால் ரசிகர்கள் இதை நம்புவது கொஞ்சம் சிரமம்தான்.

Trending News