சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

மாஸ்டரில் இருந்து நீக்கப்பட்ட 4 நிமிட காட்சியை பார்த்து வயிறு எரியும் தளபதி ரசிகர்கள்! செம்ம மெஸேஜ்

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படமும் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

மேலும் கடந்த பொங்கல் அன்று தளபதி விஜயின் நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக ரிலீசாக காத்திருந்த ‘மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி, தியேட்டர்களுக்கு புத்துயிர் அளித்தது. இதனைக் கொண்டாடும் வகையில் தியேட்டர் ஓனர்கள் அனைவரும் தளபதியை ‘பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தி’ என்று கூப்பிட ஆரம்பித்துவிட்டனர்.

இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்திலிருந்து டெலிட் செய்யப்பட்ட காட்சிகள் இணையத்தில் வெளியாகி, தளபதி ரசிகர்களை வெறியேற்றி உள்ளது.

அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி, கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக காத்திருந்த படம், கரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக இந்த ஆண்டு பொங்கல் அன்று ரிலீஸ் ஆனது. இதனால் தளபதி வெறியர்கள் மாஸ்டர் திரைப்படத்தை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் உரிமையை அமேசான் ரயில் நிறுவனம் பெற்றதோடு, டெலீட் சீன்களையும் தங்களது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது வெளியாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் டெலிட் ஆன வீடியோ ஒன்று செம்ம மாஸாக இருக்கிறதாம். அதில் தளபதி ஒவ்வொரு பிரேமிலும் ரசிக்கும் வண்ணம் நடித்திருக்கிறார் என்று பலர் கூறி வருகின்றனர்.

மேலும் அந்த காட்சியில் விஜய் பெண்களை பாலியல் ரீதியாக வன் கொடுமை படுத்துவது அவர்கள் அணியும் உடைகளால் அல்ல என்று தெள்ளத் தெளிவாக கூறியிருக்கிறார். சமூகத்தில் தற்போது நடந்து வரும் பிரச்சனையைப் பற்றி மாஸான பல டயலாக்குகளையும் அவரது ஸ்டைலில் பேசியிருக்கிறார் விஜய்.

இதனை பார்த்த தளபதி வெறியர்கள் ‘தளபதியோட இந்த மாஸ தியேட்டரில் பார்க்க முடியாம போச்சே!’ என்ற வயிற்றெரிச்சலில் உள்ளனராம்.

மாஸ்டர் படத்தில் இருந்து டெலிட் செய்யப்பட்ட வீடியோவை காண கீழே கிளிக் செய்யவும்.

Trending News