கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் தீனா. இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைது படத்தின் மூலம் திரைப் படத்தில் நடிகராக உருவானார்.
அதன்பிறகு மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பைப் பெற்றார். தீனா எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார்.
மேலும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சலிக்காமல் பதில் அளித்துவரும் தீனா. தற்போது தல தளபதி ரசிகர்கள் இடம் சிக்கியுள்ளார். அதாவது தீனா அவரது சமூக வலைதள பக்கத்தில் தல பைக் ஓட்டுவது போன்றும் தளபதி பின்னாடி அமர்ந்த படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும் நான் பதிவிட்ட போஸ்டை பார்க்கும்போது வெறித்தனமாக இருக்கிறது. இதனை தியேட்டரில் பார்த்தால் எப்படி இருக்கும் என்பதற்காகத்தான் இதனை பதிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் ஒரு சில தல தளபதி ரசிகர்கள் கமெண்ட் பாக்ஸ் இல் சண்டை போட்டுக் கொண்டு வருகின்றனர். அஜித் சார் ஹெல்மெட் போட்டிருக்கிறார் விஜய் சார் ஏன் ஹெல்மெட் போடவில்லை அப்ப ஆயிரம் ரூபாய் பைன் என்றும், நல்லா இருக்கும் ஆனால் எப்படி தியேட்டர் இருக்குமென தெரியல போன்று பதிவு செய்து வருகின்றனர்.
கோபத்தின் உச்சத்திற்கே சென்ற ஒரு ரசிகர் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாகத்தான் இருந்து வருகிறோம் நீ சும்மா இருக்க மாட்டியா எனவும் பதிவு செய்து வருகின்றனர். சும்மா இருந்த ரசிகர்களை தூண்டிவிட்டு தற்போது தீனா வலுவான பிரச்சனையில் சிக்கி தல தளபதி ரசிகர்களிடம் திட்டு வாங்கிக் கொண்டு வருகிறார்.