மாஸ்டர் 200 கோடி வசூல் என அடிச்சிவிட்ட தயாரிப்பாளர்.. நஷ்டமானதை வெட்ட வெளிச்சமாக்கிய பிரபல பத்திரிக்கை

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி மிகப்பெரிய வெற்றி அடைந்ததாக சொல்லப்பட்ட மாஸ்டர் திரைப்படம் தமிழகத்தில் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என ஒரு பத்திரிக்கை நிறுவனம் வெட்ட வெளிச்சமாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாஸ்டர் என்ற படம்தான் இந்திய சினிமாவுக்கே ஒரு வெளிச்சப்பாதையை ஏற்படுத்தியதாக படம் ரிலீஸானதிலிருந்து பல செய்திகள் வெளியானது. மேலும் உலகம் முழுவதும் 200 கோடி வசூல் செய்து விட்டதாக தளபதி ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

அதுகூட பரவாயில்லை. தமிழ்நாட்டில் பாகுபலி மற்றும் பிகில் போன்ற படங்களின் வசூலை 20 நாளில் முறியடித்து விட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தற்போது வரை தெரியவில்லை.

மாஸ்டர் படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் எக்ஸ்பி பிலிம் பேக்டரி ஆகிய இரண்டு நிறுவனமும் மாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூலை மட்டும்தான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

அதன் பிறகு ஒரு வாரம் கழித்து உலகம் முழுவதும் 200 கோடி வசூல் செய்து விட்டதாக ஒரு போஸ்டர் வெளியாகி விஜய் ரசிகர்களை நம்ப வைத்தது. ஆனால் இதுவரை மாஸ்டர் திரைப்படம் தமிழகத்தில் 70 கோடிகள் மட்டும் தான் வசூல் செய்துள்ளதாம்.

master-fake-BO-Exposed
master-fake-BO-Exposed

விஜய்யின் முந்தைய படங்களின் வசூலை கூட மாஸ்டர் திரைப்படம் முறியடிக்கவில்லை என்பது போன்ற செய்தி முன்னணி பத்திரிக்கை ஒன்றில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாய்சன் கிடைத்தாலே பாயசம் போல் சாப்பிடும் அஜித் ரசிகர்கள் பாயாசம் கிடைத்ததை கொண்டாடாமல் இருப்பார்களா. இணையத்தில் தொடங்கிவிட்டார்கள் தங்களுடைய அட்டகாசத்தை.

master-fake-BO-Exposed-twitter-trending
master-fake-BO-Exposed-twitter-trending